

திருச்சி: தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களின் கட்சிப் பதவிகளை பறித்த பழனிசாமி, லீமா ரோஸ் கட்சிப் பதவியை மட்டும் ஏன் பறிக்கவில்லை என தவெக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சியில் அதிமுக நிர்வாகிகள் சிலர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கேள்வியை எழுப்பினார். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்றார்.