காங்கிரஸ் தலைமை எடுப்பதே இறுதி முடிவு: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.சி.வேணுகோபால்

கே.சி.வேணுகோபால்

கே.சி.வேணுகோபால்

Updated on
2 min read

சென்னை: ஆட்சியில் பங்கு குறித்து கட்​சி​யில் இருக்​கும் தனிநபர்கள் யாராவது கருத்​துச் சொன்னால், அது அவர்​களின் சொந்​தக் கருத்​து​களே தவிர, அதற்​கும் காங்கிரஸ் கட்​சிக்​கும் எந்​தச் சம்பந்​தமும் இல்​லை என அகில இந்​திய பொதுச் செய​லா​ளர் கே.சி. வேணுகோ​பால் தெரி​வித்​தார்.

மத்​திய அரசைக் கண்டித்​து காங்கிரஸ் சார்பில் சென்​னை முகப்​பேரில் பாத​யாத்​திரை நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கே.சி.வேணுகோ​பால், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விவ​சா​யிகளுக்கு எதிரான போக்​கை மத்​திய அரசு கடைப்​பிடித்து வரு​கிறது.

இந்​தி​யா அமெரிக்கா இடையே போடப்​பட்​டுள்ள புதிய ஒப்​பந்​தத்​தால் அமெரிக்​கா​வின் கார்ப்​பரேட் நிறு​வனங்​கள் இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வும். இதனால் நாட்​டின் முது​கெலும்​பான விவ​சா​யிகள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​வார்​கள்.

ஏற்​கெனவே ஜவுளித் தொழில் பெரும் வீழ்ச்​சி​யைச் சந்​தித்​துள்ள நிலை​யில், இந்த ஒப்​பந்​தம் மூலம் இந்​தி​யா​வையே அமெரிக்​கா​விடம் மத்​திய அரசு சரணடையச் செய்​துள்​ளது. அமெரிக்க அதிபர் இந்​தியா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

ஆனால் இந்​திய அரசோ மவுனம் காத்து வரு​கிறது. நாடாளு​மன்​றத்தில் ஜனநாயகம் முடக்​கப்​பட்​டுள்​ளது. எதிர்க்​கட்சிகள் பேச முடி​யாத சூழல் உள்ளது. மக்கள் பிர​தி​நி​தி​களின் உரை அவை குறிப்​பில் நீக்​கப்​படு​கின்றன.

திமுக- காங்​கிரஸ் இடையே​யான உறவு என்​பது மிக நீண்ட கால மற்​றும் கொள்கைரீதி​யான கூட்​ட​ணி. பல்​வேறு விவ​காரங்​களில் மத்​திய அரசை எதிர்த்து நாங்கள் இணைந்து போராடி வரு​கிறோம்.

அந்த ஒற்​றுமை இப்போதும் தொடர்​கிறது. தேர்​தல் நெருங்​கும் வேளையில், எங்​களுக்கும் எங்​களு​டைய கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கும் தெளி​வான இலக்​கு​கள் உள்​ளன. தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைக்​காக நாங்​கள் காத்​திருக்​கிறோம்.

கூட்​டணி ஆட்சி குறித்து கட்​சி​யில் இருக்​கும் தனி​நபர்​கள் யாராவது கருத்​துச் சொன்​னால், அது அவர்​களின் சொந்​தக் கருத் துகளே தவிர, அதற்​கும் கட்​சிக்​கும் எந்​தச் சம்​பந்​த​மும் இல்​லை. கூட்​டணி மற்​றும் அதன் முடிவு​கள் குறித்து அகில இந்​தி​யத் தலைமை மட்​டுமே இறு​தி முடிவெடுக்​கும். இவ்​வாறு கூறினார்.

முன்​ன​தாக நடந்த மாவட்ட தலை​வர்​கள் கூட்​டத்​தில், ‘கூட்டணிக் குறித்து பொது​வெளி​யில் பேசக்​கூ​டாது. மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​பது உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

காங்​கிரஸுக்கு திமுக விதித்த திடீர் நிபந்​தனை: விருதுநகர் காங்கிரஸ் எம்​.பி. மாணிக்​கம் தாகூர் மற்​றும் அகில இந்​திய நிர்​வாகி பிர​வீன் சக்​ர​வர்த்தி ஆகியோர் திமுக-வுக்கு எதி​ரான கருத்​துகளை பேசி வந்தனர்.

இந்​நிலை​யில், பெங்​களூரு​வில் மல்​லி​கார் ​ஜுன கார்​கேவை சந்தித்த தமிழக தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, மேலிட உத்​தரவை மீறி பேசி வரும் மாணிக்​கம் தாகூர், பிர​வீன் சக்​ர​வர்த்தி மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி மனு அளித்​தார்.

இதற்​கிடையில், சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுத்​தால் மட்​டுமே கூட்​டணி தொடர்​பான பேச்​சு​வார்த்​தைக்கு முன்​வரு​வோம் என்று திமுக தரப்​பில் கூறி​யுள்​ள​தாகத் தெரி​கிறது. இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>கே.சி.வேணுகோபால்</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 பிப்ரவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in