டிச.25-ம் தேதி வரை சென்னையில் சங்கீத ராக மஹோத்ஸவம்: நலிவடைந்தோருக்கு வாய்ப்பளிக்க நீதியரசர் ஜி.சந்திரசேகரன் வேண்டுகோள்

நாதப்ரம்மம் அமைப்பின் சங்கீத ராக மஹோத்ஸவ விழாவில் நீதியரசர் ஜி.சந்திரசேகரன் பங்கேற்று, வித்வான்கள் எட அன்னவாசல் மணிசங்கர் (நாதஸ்வரம்), ஜெயந்தி மணிசங்கர் (வயலின்), அமிர்தவர்ஷினி மணிசங்கர் (தவில்) ஆகியோருக்கு ‘நாத ஸ்வரலயகான மணிகள்’ விருது வழங்கி கவுரவித்தார். உடன் ரோட்டேரியன் கே.சீனிவாசன், நாதப்ரம்மம் அமைப்பின் நிறுவனர் என்.சுப்பிரமணியன், கவுரவ செயலர் பத்ரி நாராயணன். | படம்: எஸ்.சத்தியசீலன் | 

நாதப்ரம்மம் அமைப்பின் சங்கீத ராக மஹோத்ஸவ விழாவில் நீதியரசர் ஜி.சந்திரசேகரன் பங்கேற்று, வித்வான்கள் எட அன்னவாசல் மணிசங்கர் (நாதஸ்வரம்), ஜெயந்தி மணிசங்கர் (வயலின்), அமிர்தவர்ஷினி மணிசங்கர் (தவில்) ஆகியோருக்கு ‘நாத ஸ்வரலயகான மணிகள்’ விருது வழங்கி கவுரவித்தார். உடன் ரோட்டேரியன் கே.சீனிவாசன், நாதப்ரம்மம் அமைப்பின் நிறுவனர் என்.சுப்பிரமணியன், கவுரவ செயலர் பத்ரி நாராயணன். | படம்: எஸ்.சத்தியசீலன் | 

Updated on
1 min read

சென்னை: நலிவடைந்த கலைஞர்​களுக்கு சபாக்​கள் வாய்ப்பு அளிக்க வேண்​டும் என்று நாதப்​ரம்​மத்​தின் சங்​கீத ராக மஹோத்ஸவ விழா​வில் நீதியரசர் ஜி.சந்​திரசேகரன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

நாதப்​ரம்​மம் யுனைடெட் கியான் அகாடமி (NUGA) என்ற அமைப்பு பாரம்​பரிய இந்​திய இசை, கல்​வி, கலை, கலாச்​சா​ரம், யோகா ஆகிய​வற்றை மேம்​படுத்​தும் நோக்​கில் கடந்த 2002-ல் தொடங்​கப்​பட்​டது. அது​முதல் இந்​தியா மற்​றும் வெளி​நாடு​களில் இசை நிகழ்ச்​சிகள் நடத்திவரு​கிறது.

நாதப்​ரம்​மம் அமைப்பு தொடங்கி 24 ஆண்​டு​கள் ஆவதை முன்​னிட்டு இந்த ஆண்டு இசை​விழா கோலாகல​மாக தொடங்​கி​யுள்​ளது. சென்னை மேற்கு மாம்​பலத்​தில் ராஜு தெரு​வில் அமைந்​துள்ள அனுக்​ரஹா ஏசி மினி ஹாலில் கடந்த 19-ம் தேதி சங்​கீத ராக மஹோத்ஸவம் தொடங்​கியது. நாதப்​ரம்​மத்​தின் நிறு​வனர் என்​. சுப்​பிரமணி​யன் வரவேற்​புரை ஆற்​றி​னார்.

தந்​தை, தாய், மகள்: நீதி​யரசரும், கடன் மீட்பு மேல்​ முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தின் (சென்​னை) தலை​வரு​மான ஜி.சந்​திரசேகரன், விழாவை தொடங்​கி​வைத்​தார். நாதஸ்​வரக் கலைஞர் எட அன்​ன​வாசல் மணிசங்​கர், வயலின் கலைஞரும், திரு​வாருர் இசைப் பள்ளி ஆசிரியை​யு​மான ஜெயந்தி மணிசங்​கர், சட்​டக் கல்​லூரி மாண​வி​யும் தவில் கலைஞரு​மான அமிர்​தவர்​ஷினி மணி சங்​கர் ஆகியோருக்கு ‘நாத ஸ்வரலய​கான மணி​கள்’ விருதை வழங்கி கவுர​வித்​தார்.

நிகழ்ச்​சிய பேசிய அவர்,“திறமை இருந்​தும் வாய்ப்புகிடைக்​காதவர்​களுக்கு சபாக்​கள், நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்​டும். நலிவடைந்த கலைஞர்​களுக்​கும் நிகழ்ச்​சிகள் ஏற்​பாடு செய்து தர வேண்​டும். ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேருக்கு (தந்​தை, தாய், மகள்) சேர்த்து விருது தரு​வது இதுவே முதல் முறை. இளம் தலை​முறையினருக்கு அவர்​கள் பெற்​றோரின் ஊக்​கு​விப்பு, ஆதரவு அவசி​யம். அந்த வகை​யில் அமிர்​தவர்​ஷினிக்கு அவரது பெற்​றோர் மிக​வும் உறு​துணை​யாக இருக்​கின்​றனர்” என்​றார்.

இசை என்பது அரு​மருந்​து: ஏற்​புரை வழங்​கிய ஜெயந்தி மணிசங்​கர், “இசை என்​பது அரு​மருந்​து. அனைத்து கவலைகளை​யும் மறக்​கச் செய்​வது இசை. குடும்​பத்​தில் உள்ள அனை​வரும் இசை​யுடன் தொடர்​பில் இருப்​ப​தால் மிக​வும் மகிழ்ச்​சி​யாக உள்​ளது. மூவரும் சேர்ந்து விருது பெறு​வதை மிக​வும் பாக்​கிய​மாக கருதுகிறேன்” என்​றார். நாதப்​ரம்​மத்​தின் கவுரவ செயலர் மருத்​து​வர் டி.பத்​ரி​நா​ராயணன் நன்​றி​யுரை வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் ரோட்​டேரியன் கே.சீனி​வாசன்​ உள்​ளிட்​டோர்​ பங்கேற்றனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in