முதுகலை மருத்துவம் படித்தவர்களுக்கு கலந்தாய்வின்றி வழங்கிய பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும்: அரசு மருத்துவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

முதுகலை மருத்துவம் படித்தவர்களுக்கு கலந்தாய்வின்றி வழங்கிய பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும்: அரசு மருத்துவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
Updated on: 
1 min read

சென்னை: நடப்​பாண்​டில் முதுகலை படிப்பு முடித்த மருத்​து​வர்​களுக்கு கலந்​தாய்வு இல்​லாமல் வழங்​கப்​பட்ட பணி ஆணை​களை ரத்து செய்ய வேண்​டும் என்று அரசு மருத்​து​வர்​கள் சங்​கம் வலியுறுத்தியுள்​ளது.

அரசு மருத்துவர்கள் மற்​றும் பட்​டமேற்​படிப்பு மருத்​து​வர்​கள் சங்​கத்​தின் கூட்​டம் காணொலி​யில் நடந்​தது. சங்க நிர்​வாகி​கள், நடப்​பாண்டு பட்​டமேற்​படிப்பு முடித்த, முடிக்​க​விருக்​கும் அரசு மருத்​து​வர்​கள் (சர்​வீஸ் பிஜி) கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர்.

இந்த கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள் விவரம் வருமாறு: நடப்​பாண்​டில் பட்​டமேற்​படிப்பு முடிக்​கும் (ஜூலை முதல் தற்​போது வரை​யில்) அரசு சேவை மருத்​து​வர்​களுக்கு கலந்​தாய்வு இல்​லாமல் பணி ஆணை வழங்​கப்​பட்​டதற்கு எதிர்ப்பு தெரிவிக்​கப்​பட்​டது.

தற்​காலிக அல்​லது நிரந்தர பணி மாறு​தல் ஆணை எது​வாக இருப்​பினும் அது வெளிப்​படை​யான கலந்​தாய்​வின் மூலமே நடத்த வேண்​டும். சர்​வீஸ் சீனியர்​களுக்கு மருத்​து​வக் கல்​வித் துறை​யில் பணி​யிடங்​கள் வழங்​காமல், பணி இளை​யோ​ருக்கு வழங்​கு​வது எதிர்​கால சிக்​கல்​களை உரு​வாக்​கிடும்.

மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் பணி​யிடம் நிரப்​பப்​ப​டா​மல் இருப்​பதும் தற்​போதைய நிலைக்கு ஒரு காரணி​யாக உள்​ளது. இது​போன்ற நிர்​வாக தவறுகளால், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​தில் பல வழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் உள்​ளன.

கலந்​தாய்வு இல்​லாமல் வழங்​கப்​பட்ட ஆணை​களை உடனடி​யாக ரத்து செய்ய வேண்​டும். கலந்​தாய்​வின் மூலமே தற்​காலிக அல்​லது நிரந்தர பணி ஆணை​களை பட்​ட மேற்​படிப்பு மருத்​து​வர்​களுக்கு வழங்​க வேண்​டும்​. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவம் படித்தவர்களுக்கு கலந்தாய்வின்றி வழங்கிய பணி ஆணைகளை ரத்து செய்ய வேண்டும்: அரசு மருத்துவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
சைபர் மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்க முதியோருக்கு போலீஸார் விழிப்புணர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in