தேர்தல் காலகட்டத்தில் வரும் 7 சுப முகூர்த்த தினங்கள்: பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் நகை, பணம்

விழிப்புணர்வின்றி பரிதவிக்கும் திருமண வீட்டார்
மதுரையில் திருமண வீட்டார் கொண்டு சென்ற நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் திருமண வீட்டார் கொண்டு சென்ற நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Updated on
1 min read

மதுரை: நடப்பு மாதம் அதி​களவு முகூர்த்த தினங்​கள் உள்ள நிலை​யில் திரு​மணத்​துக்​காக விழிப்​புணர்வு இன்றி எடுத்து செல்​லப்​படும் நகை, பணம் வாக​னச் சோதனை​யில் சிக்கி வரு​கின்​றன. நேற்று மதுரை அருகே சக்​குடி​யில் திரு​மணத்​துக்​காக கொண்டு செல்​லப்​பட்ட ரூ.27 லட்​சம் மதிப்​பிலான நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

தமிழகத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​துள்​ள​தால், பொது​மக்​கள் ரூ.50 ஆயிரத்​துக்கு மேல் கொண்டு செல்​லத் தடைவிதிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், ரூ.2 லட்​சத்​துக்கு மேல் ஆபரணங்​கள் கொண்டு செல்​ல​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த விதி​களை மீறு​வோர் மீது தேர்​தல் பறக்​கும் படை​யினர் நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கின்​றனர். அதன்​படி, மதுரை மாவட்​டத்​தில் உள்ள 10 தொகு​தி ​களி​லும் தேர்​தல் பறக்​கும் படை​யினர் தொடர்ந்து வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் நேற்று மதுரை கிழக்​குத் தொகு​திக்​குட்​பட்ட சக்​குடி - பூவந்தி சாலை​யில் வட்​டாட்​சி​யர் பாண்டி தலை​மையி​லான பறக்​கும் படை​யினர் வாக​னச் சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அவ்​வழி​யாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்​தனர். அதில், உரிய ஆவணங்​களின்றி ரூ.27 லட்​சம் மதிப்​பிலான 25 பவுன் நகைகள் எடுத்​துச் சென்​றது தெரிந்​தது.

இந்த நகைகளை மதுரை ஆனையூரைச் சேர்ந்த சரவணன் என்​பவர் தனது மகளின் திரு​மணத்​துக்​காகக் கொண்டு சென்​றார். ஆனால் நகைகளுக்​கான உரிய ஆவணங்​கள் இன்​றி, அவற்றை பறி​முதல் செய்​து, தேர்​தல் அலு​வலர் கருணாகரன் மூலம் அரசு கரு​வூலத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டது. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி​யான ஏப்​.23 வரை 7 சுப முகூர்த்​தங்​கள் உள்​ளன. இந்த நாட்​களில் மாநிலம் முழு​வதும் ஆயிரக்​கணக்​கான திரு​மணங்​கள் நடக்க உள்​ளன. இதற்​காக

ஏற்​கெனவே நகைகள், புத்​தாடைகள் வாங்கி வைத்​தவர்​களுக்கு பிரச்​சினை இல்​லை. அதை தவிர்த்​து, தற்​போது உரிய ஆவணம் இன்றி நகைகள், புத்​தாடைகள் வாங்​கிச் செல்​வோர் சிரமத்தை சந்​திக்​கிறார்​கள்.

கைப்​பற்​றப்​பட்ட நகை, பணத்தை தேர்​தல் அலு​வலர்​களிடம் இருந்து திரும்ப மீட்​பது சிரம​மான காரி​யம். அதனால் நகை, பணம் போன்​றவற்றை எடுத்​துச் செல்​பவர்​கள் அதற்​கான ஆவணங்​களை உடன் எடுத்​துவர தேர்​தல் அலு​வலர்​கள் கிராமங்​கள், நகரங்​களில் போதிய விழிப்​புணர்வு செய்ய வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​துள்​ளது.

<div class="paragraphs"><p>மதுரையில் திருமண வீட்டார் கொண்டு சென்ற நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.</p></div>
ஒடிசா: ராஜ்யசபா தேர்தலில் மாற்றி வாக்களித்த 6 பிஜேடி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in