எஸ்ஐஆர் பணியின்போது இறந்த வாக்காளர்களை உயிர்ப்பிக்க கூடாது: ஜெயக்குமார் வலியுறுத்தல்

எஸ்ஐஆர் பணியின்போது இறந்த வாக்காளர்களை உயிர்ப்பிக்க கூடாது: ஜெயக்குமார் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: எஸ்ஐஆர் பணி​யில், இறந்த வாக்​காளர்​களின் பெயர்​களை நீக்​காமல், அவர்​களை உயிர்ப்​பிக்​கக் கூடாது என்று முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை மாவட்​டத்​தில் நடை​பெற்று வரும் வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்​பாக மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் அனைத்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் திமுக, அதி​முக, பாஜக, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், இந்​திய கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​றனர். ஆலோ​சனைக் கூட்​டத்​துக்​குப் பிறகு முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எஸ்ஐஆர் பணி​யில், மாவட்ட நிர்​வாகம் இறந்​தவர்​களை உயிரோடு கொண்டு வரக்​கூடிய செயல்​முறையை செய்​யக் கூடாது.

ஒரு தொகு​தியி​லிருந்து வேறு தொகு​திக்கு சென்​றவர்​களுக்கு வாக்​குரிமை மறுக்​கப்​படக் கூடாது எனக் கூறி இருக்​கிறோம். தொகு​திக்கு 100 பேர் என தன்​னார்​வலர்​கள் ரூ.1000 கூலிக்கு நியமித்​துள்​ளார்​கள். அவர்​களின் பட்​டியலைக் கேட்​டுள்​ளோம். இந்த எஸ்ஐஆர் பணி மூலம் தமிழகம் முழு​வதும் 50 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் நீக்​கப்பட உள்​ளனர்.

சென்​னை​யில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை நீக்​கப்பட உள்​ளனர். ஆனால் இறந்​தவர்​களின் பெயர், வேறு இடங்​களுக்கு குடிபெயர்ந்​தவர்​களின் பெயர்​கள் 20 ஆண்​டு​களாக நீக்​கப்​பட​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

காங்​கிரஸ் கட்சி பிர​தி​நிதி எஸ்.கே.ந​வாஸ் பேசும்போது, “குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டும், வட மாநிலத்​தவருக்கு வாக்​குரிமை வழங்க வேண்​டும் என்ற நோக்​கத்​தோடு தேர்​தல் ஆணை​ய​மும், மத்​திய அரசும் செயல்​படு​கின்​றன” என்​றார்.

பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் பேசும்போது, “இதுவரை 65 சதவீத படிவங்கள்தான் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஒரு பிஎல்ஓ-தான் இருக்கிறார். 100 வாக்காளருக்கு ஓர் உதவியாளர் வீதம் நியமிக்கக் கோரியிருக்கிறோம்.

மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் 400 தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்தி மாதம் ரூ.1 கோடி முறைகேடு நடைபெற்றதாக புகார் தெரிவித்தோம். ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வோம் என ஆணையர் தெரிவித்துள்ளார்” என்றார்.

எஸ்ஐஆர் பணியின்போது இறந்த வாக்காளர்களை உயிர்ப்பிக்க கூடாது: ஜெயக்குமார் வலியுறுத்தல்
திருவள்ளூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்: வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in