டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையராக பதவியேற்றார் ஜெயா ஐஏஎஸ்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையராக பதவியேற்றார் ஜெயா ஐஏஎஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையராக ஜெயா.ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் அவர் முதல் பெண் அதிகாரியாகக் இன்று பதவி ஏற்றார்.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான ஆர்.ஜெயா டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தலைமை உள்ளுறை ஆணையாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.

ஐஏஎஸ் அதிகாரியான ஆர்.ஜெயா, 1995 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மாநிலத் தொகுப்பில் பணியாற்றி வருபவர். இதற்கு முன்னதாக இவர் தமிழ்நாடு அரசின் சிறப்பு முன்முயற்சிகள் துறையில் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் செயலாளராக பணிபுரிந்தார்.

மேலும், புது தில்லியில் மத்திய அரசின் அயல்பணியில் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலாளர் ,கூடுதல் செயலாளர் அந்தஸ்திலும் பணிபுரிந்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர், தமிழ், ஆங்கிலத்துடன் மராட்டி மற்றும் இந்தி மொழிகளிலும் கற்றுத் தேர்ந்தவர்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையராக பதவியேற்றார் ஜெயா ஐஏஎஸ்
திரைப் பார்வை: சட்டென்று மாறுது வானிலை - ஜெய்யின் காப்பியும் மீனாட்சியின் ஒரிஜினலும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in