ஜப்பானின் மினிபியா நிறுவனம், ஏக்வஸ் குழுமத்துடன் ரூ.5,980 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து; 8,400 பேருக்கு வேலை கிடைக்கும்
திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர் தொடர்பான உற்பத்தி ஆலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானின் மினிபியா மிட்சுமி நிறுவனத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உடன் தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாரேஸ் அகமது, மினிபியா நிறுவனத்தின் நிர்வாகிகள், அதிகாரிகள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர் தொடர்பான உற்பத்தி ஆலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானின் மினிபியா மிட்சுமி நிறுவனத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உடன் தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாரேஸ் அகமது, மினிபியா நிறுவனத்தின் நிர்வாகிகள், அதிகாரிகள்.

Updated on
2 min read

சென்னை: ஜப்பானின் என்எம்பி மினிபியா மற்றும் ஏக்வஸ் குழுமம் சார்பில் ரூ.5,980 கோடியில், 8,400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

நாட்டிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழகம் விளங்குகிறது. மாநிலத்தில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், இளைஞர்கள், பெண்களுக்கு அதிகஎண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலப் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தவும், தமிழக அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைக்கப்பட்டு ரூ.12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

867 ஒப்பந்தங்கள் செயலாக்கம்: இதன்வாயிலாக 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் தற்போது ரூ.7.91 லட்சம் கோடி மதிப்பிலான 867 ஒப்பந்தங்கள் செயலாக்கத்துக்கு வந்துள்ளன. இதன்மூலம் 17.84 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, கடந்த பிப்.12-ம் தேதி நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் நடத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில், ரூ.36,968 கோடி மதிப்பில் 60,664 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 71 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அத்துடன், ரூ.31,934 கோடி முதலீட்டில் 82,664 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 52 முடிவுற்ற திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதுதவிர, இந்த நாட்டில், ரூ.5,000 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 2 புதிய ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று 2 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 1,400 பேருக்கு வேலைஜப்பான் நாட்டைச் சேர்ந்த மினிபியா மிட்சுமி நிறுவனம், செமிகண்டக்டர் பொருட்கள், மோட்டார், சென்சார், மின் சாதனங்கள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தது.

இதன் துணை நிறுவனமான என்எம்பி மினிபியா ரூ.1,980 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 1,400 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழிற்பூங்காவில், பல்வகை செயல்பாடுகளைக் கொண்ட செமிகண்டக்டர்கள் உயர் மதிப்பு கொண்ட ஐஜிபிடிக்கள், (Insulated-Gate Bipolar Transistor) ஐசிக்கள் (Integrated Circuits) போன்றவற்றுக்கான முழுமையான உற்பத்தி அமைப்பை உருவாக்கவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையம் அமைக்கவும் முன்மொழிந்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக, உயர் திறன் மிக்க பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

7,000 பேருக்கு வேலை: இதேபோல் ஏக்வஸ் (Aequs) குழுமம் ரூ.4 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 7 ஆயிரம் பேருக்கு உறுதிஅளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் - சூளகிரி தொழிற்பூங்காவில் விண்வெளி, பாதுகாப்புத் துறை உற்பத்தி தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரம், கியர் பாக்ஸ் உப பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கவும் முன்மொழிந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த தொழிற்பூங்காவில் விமான இயந்திர உப பாகங்கள், துல்லிய பொறியியல் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த நிகழ்வில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாரேஸ் அகமது, மினிபியா மிட்சுமி மற்றும் ஏக்வஸ் நிறுவனங்களின் நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>திருவள்ளூர் மாவட்டத்தில் செமிகண்டக்டர் தொடர்பான உற்பத்தி ஆலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பானின் மினிபியா மிட்சுமி நிறுவனத்துடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உடன் தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாரேஸ் அகமது, மினிபியா நிறுவனத்தின் நிர்வாகிகள், அதிகாரிகள்.</p></div>
10-ம் வகுப்பு தேர்வை தவிர்த்துவிட்டு ஐபிஎல் சீசனுக்கு தயாராகும் வைபவ் சூர்யவன்ஷி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in