'ஜனநாயகன்' படத்துக்கு உடனடியாக தடை பெற்றது அசாதாரண நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் எம்.பி | கோப்புப் படம்

கார்த்தி சிதம்பரம் எம்.பி | கோப்புப் படம்

Updated on
1 min read

காரைக்குடி: 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு உடனடியாக தடை பெற்ற அசாதாரணமான நடவடிக்கை என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கார்த்தி சிதம்பரம் எம்.பி திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜனநாயகன் என்ற சாதாரண திரைப்பட வழக்கில் அவசர அவசரமாக மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் ஆஜராகியது யோசிக்க வைக்கிறது. ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தடை வாங்கியது அசாதாரண நடவடிக்கை.

மத்திய அரசு அரசியல் காரணங்களுக்காக அனைத்து துறைகளையும் ஆயுதமாக பயன்படுத்துகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தரவுகளை எடுக்கவே தனியார் தேர்தல் ஆலோசனை நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது. இதில் மம்தா பானர்ஜி எடுத்த நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்.

காங்கிரஸை பற்றி முழுமையாக தெரியாமல் விஜய பிரபாகரன் பேசுகிறார். விஜயகாந்த் காங்கிரஸ் மீதும், எங்கள் கட்சி தலைவர் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். இதை சிந்தித்து பார்த்து விஜய பிரபாகரன் பேச வேண்டும்” என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாங்குடி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

<div class="paragraphs"><p>கார்த்தி சிதம்பரம் எம்.பி | கோப்புப் படம்</p></div>
‘ஓர் ஆலோசனைக் குழுவை அமைப்பீர்’ - சாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in