பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடுவதை உறுதி செய்வது அரசின் கடமை: உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: 'விழுப்புரம் மாவட்டம் அய்யனூர் கிராமத்தில் உள்ள ராமானுஜரின் கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதை உறுதி செய்வது அரசின் கடமை. பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தக் கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அய்யனூர் கிராமத்தில் உள்ள ராமானுஜர் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றும், அங்கு வழிபாடு நடத்தக் கூடாது என்றும் பட்டியலின சமூக மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தடையை நீக்கி வழிபாடுகளில் பங்கேற்க அனுமதி வழங்கக்கோரி ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடிய ராமானுஜரின் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில், அந்த கோயிலுக்கு மின் இணைப்பு வழங்க அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனிநபர் பெயரில் மி்ன் இணைப்பு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன, ராமானுஜரே நேரில் வந்து மின்இணைப்பு கோர வேண்டும் என நினைக்கிறீர்களா எனk கேள்வி எழுப்பினார்.

மேலும், பட்டியலின மக்கள் ராமானுஜரின் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை உறுதி செய்வது அரசின் கடமை. பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மீறி யாராவது தடுத்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ராமானுஜர் கோயிலுக்கு எப்போது மின் இணைப்பு வழங்கப்படும் என்பது குறித்து மின்வாரியமும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

<div class="paragraphs"><p>சென்னை உயர்நீதிமன்றம்</p></div>
“திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற தவெக அரசு முட்டுக்கட்டை போடுவது முறையல்ல” - கிருஷ்ணசாமி

X