அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை பேரவைத் தலைவர் விசாரணையின்றி ஏற்றுக்கொண்டது ஏற்புடையது அல்ல: உயர் நீதிமன்றத்தில் வாதம்

அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை பேரவைத் தலைவர் விசாரணையின்றி ஏற்றுக்கொண்டது ஏற்புடையது அல்ல: உயர் நீதிமன்றத்தில் வாதம்
Updated on
2 min read

சென்னை: அ​திமுக எம்​எல்​ஏ-க்​கள் தங்​களது சுய​விருப்​பத்​துடன் தான் தங்​களது பதவியை ராஜி​னாமா செய்​தார்​களா என சட்​டப்​பேர​வைத் தலை​வர் எந்த விசா​ரணை​யும் நடத்​தாமல், அவர்​களின் கடிதங்​களை ஏற்​றுக்​கொண்​டது சட்​டரீ​தி​யாக ஏற்​புடையதல்ல என அதி​முக கொறடா தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி. கிரி உயர் நீதி​மன்​றத்​தில் வாதிட்​டார்.

அதி​முக கொற​டா​வின் உத்​தரவை மீறி அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மது​ராந்​தகம் மரகதம் குமர​வேல், தாராபுரம் சத்​தி​ய​பா​மா, பெருந்​துறை ஜெயக்​கு​மார், அம்​பாச​முத்​திரம் இசக்கி சுப்​பை​யா, விராலிமலை சி.​விஜய​பாஸ்​கர், கரூர் எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் உள்​ளிட்​டோர் சட்​டப்​பேர​வை​யில் தவெக அரசுக்கு ஆதர​வாக செயல்​பட்​டனர்.

அதையடுத்து அவர்​கள் மீது கட்​சித்​தாவல் தடைச்​சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கக்​கோரி அதிமுக சார்​பில் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் கொடுக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், மரகதம் குமர​வேல், விஜய​பாஸ்​கர் உள்​ளிட்ட 6 பேரும் தங்​களது பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக-​வில் இணைந்​தனர்.

அவர்​களின் ராஜி​னா​மாவை பேர​வைத் தலை​வரும் ஏற்​றுக் கொண்​டதையடுத்து அந்த தொகு​தி​கள் காலி​யான​தாக அறிவிக்​கப்​பட்​டது. கட்​சித்​தாவல் நடவடிக்கை நிலு​வை​யில் இருந்து வந்த நிலை​யில் அதி​முக எம்​எல்​ஏ-க்​களின் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்று பேர​வைத் தலை​வர் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி அதி​முக கொறடா எஸ்​.எஸ்.

கிருஷ்ண​மூர்த்தி உள்​ளிட்​டோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடர்ந்​திருந்​தனர். இந்த வழக்​கு​கள் தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது அதி​முக கொறடா அக்ரி கிருஷ்ண​மூர்த்தி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வி.கிரி தனது வாதத்​தில் கூறிய​தாவது: கடந்த மே 13 அன்று சட்​டப்​பேர​வை​யில் தவெக அரசு கொண்டு வந்த நம்​பிக்கை தீர்​மானத்​தில், அதி​முக கொற​டா​வின் உத்​தரவை மீறி ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வாக வாக்​களித்த இந்த எம்​எல்​ஏ-க்​கள் தங்​களது கட்​சிப் பதவியை ராஜி​னாமா செய்த 30 நிமிடங்​களில் தவெக-​வில் இணைந்​துள்​ளனர்.

அவர்​கள் தங்​களது சுய​விருப்​பத்​தின்​பேரில் தங்​களது பதவியை ராஜி​னாமா செய்​தார்​களா என்​பதை பேர​வைத் தலை​வர் விசா​ரணை நடத்​தி, அதன்​பிறகே உரிய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்​டும்.

ஆனால் அவர்​களுக்கு எதி​ராக கட்​சித்​தாவல் நடவடிக்கை நிலு​வை​யில் இருக்​கும்​போது எந்​தவொரு விசா​ரணை​யும் நடத்​தாமல் பேர​வைத் தலை​வர், அவர்​களின் ராஜி​னாமா கடிதங்​களை ஏற்​றுக்​கொண்​டது சட்​டரீ​தி​யாக ஏற்​புடையதல்ல. சட்​டப்​பேர​வைச் செயலர் தாக்​கல் செய்​துள்ள பதில் மனு​விலும் அதுதொடர்​பாக எது​வும் குறிப்​பிடப்​பட​வில்​லை.

மாறாக ராஜி​னாமா செய்​யும் அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் உடனடி​யாக தவெக​வில் இணை​யப் போகிறார்​கள் என்ற தகவல் முன்​கூட்​டியே பேர​வைத் தலை​வருக்கு தெரிய​வந்​த​தால் தான் அவர் எந்​தவொரு விசா​ரணை​யும் நடத்​தாமல் அவர்​களது ராஜி​னா​மாவை ஏற்​றுள்​ளார். பெரும்​பான்மை பலத்தை நிரூபி்க்க ஒரு கட்​சி​யின் எம்​எல்​ஏ-க்​களை தங்​களது கட்​சி​யில் இணைக்க ஆளுங்​கட்சி எடுத்த பகீரத நடவடிக்​கை​யாகவே இதைக் கருத முடி​யும்.

இதுதொடர்​பாக பேர​வைத் தலை​வருக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யும் அவரது சார்​பில் எந்த பதி​லும் இல்​லை. இதுதொடர்​பாக பேர​வைச் செய​லா​ளர் பதில்​ மனு தாக்​கல் செய்​துள்​ளார். ஆளுநரைப் போல பேர​வைத் தலை​வருக்கு எந்த சட்டப் பாது​காப்​பும் கிடை​யாது.

எனவே இந்த வழக்​கில் பேர​வைச் செயலர் தாக்​கல் செய்​துள்ள பதில் மனுவை பேர​வைத் தலை​வர் சார்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு​வாக ஏற்​கக்​கூ​டாது. மேலும், எதன் அடிப்​படை​யில் ராஜி​னாமா கடிதங்​கள் ஏற்​கப்​பட்​டது என்​பது தொடர்​பாக பேர​வைத் தலை​வர் தான் பதிலளிக்க வேண்​டும்.

இவ்​வாறு அவர் வா​திட்​டார். அதி​முக தரப்பு வாதங்​கள் நிறைவடை​யாத​தால் நீதிப​தி​கள்​ வழக்​கு வி​சா​ரணை​யை வரும்​ ஆக.17-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​

அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை பேரவைத் தலைவர் விசாரணையின்றி ஏற்றுக்கொண்டது ஏற்புடையது அல்ல: உயர் நீதிமன்றத்தில் வாதம்
முதல் டெஸ்டில் இன்று மோதல்: ஆஸி.யிடம் தாக்குப்பிடிக்குமா வங்கதேசம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in