

ISRO to launch PSLV-C62/EOS-N1 Mission on January 12
சென்னை: புவி கண் காணிப்புக்காக இஒஎஸ்-என் 1 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் மூலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து வரும் 12-ம் தேதி காலை 10.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனுடன் சேர்த்து 18 சிறிய செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட இருக்கின்றன.
அதிநவீன இஒஎஸ்-என் 1 செயற்கைக்கோள் விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும். மேலும், ராணுவக் கண்காணிப்பு செயல்பாடுகளையும் தீவிரமாக மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.