நடப்பாண்டில் 18 செயற்கைக்கோள்கள் ஏவப்படும்: மத்திய இணையமைச்சர் தகவல்

நடப்பாண்டில் 18 செயற்கைக்கோள்கள் ஏவப்படும்: மத்திய இணையமைச்சர் தகவல்
Updated on
1 min read

சென்னை: இஸ்ரோ மூலம் நடப்​பாண்​டில் 18 செயற்​கைக்​கோள்​கள் விண்​ணில் செலுத்​தப்​படும் என்று மத்​திய இணை​யமைச்​சர் ஜிதேந்​திர சிங் தெரி​வித்​தார்.

இந்​திய தொழிலக ஆய்வு குழு​மம் (சிஎஸ்​ஐஆர்) சார்​பில் தொழில்​நுட்​பங்​களை காட்​சிப்​படுத்​தும் வகை​யில் ஆராய்ச்சி மற்​றும் தொழில்​முனைவு தொடர்​பான 2 நாள் மாநாடு சென்னை வர்த்தக மையத்​தில் நேற்று தொடங்​கியது. இதை மத்​திய அறி​வியல் தொழில்​நுட்​பத்துறை இணை​யமைச்​சர் ஜிதேந்​திர சிங் தொடங்கி வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில் அவர் பேசும்​போது, “தொழில் துறை​யில் வளர்ச்சி அடை​யும் நோக்​கில் குறு, சிறு நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு இந்த பட்​ஜெட்​டில் ரூ.1000 கோடி வளர்ச்சி நிதி ஒதுக்​கி​யுள்​ளது. புத்​தாக்கத் தொழில் நிறு​வனங்​களும் ஊக்​குவிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி, இந்​தி​யா​வில் 2 லட்​சம் புத்​தாக்க தொழில் நிறு​வனங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.

தற்​போதைய சூழலில் செல்​போன் மூலம் உலகில் அனைத்து விவரங்​களை​யும் தெரிந்து கொள்ள முடி​யும். புதிய புத்​தாக்க தொழில் தொடங்க முன்​வருபவர்​களுக்கு தொழில் துறையை சேர்ந்த முன்​னணி தலை​வர்​கள் உதவிசெய்ய தயா​ராக​ உள்​ளனர். இதை பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்” என்​றார்.

21 லட்​சம் வேலை​வாய்ப்பு: தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: இந்​தி​யா​வில் இது​வரை 2 லட்​சம் புத்​தாக்கத் தொழில் நிறு​வனங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இதன்​மூலம் 21 லட்​சம் பேர் வேலை​வாய்ப்பை பெற்​றுள்​ளனர். தமிழகத்​தில் சென்​னை, கோவை மாவட்​டங்​களில் மட்​டுமே புத்​தாக்கத் தொழில் நிறு​வனங்​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. மற்ற மாவட்​டங்​களி​லும் தொடங்க வேண்​டும். இதற்​கான உதவி​களை செய்ய மத்​திய அரசு தயா​ராகவே உள்​ளது.

விண்​வெளி ஆராய்ச்சி திட்​டங்​களில் இந்​தியா சிறப்​பான இடத்தை பெற்​றுள்​ளது. நடப்​பாண்​டில் இஸ்ரோ மூலம் 18 செயற்​கைக்​கோள்​கள் விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

மாநாட்​டின் இறு​தி​நாளான இன்று (பிப். 15) மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்​து​கொள்​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய புவி அறி​வியல் துறை செயலர் எம்.ர​விசந்​திரன், மத்​திய தோல் ஆராய்ச்சி நிறு​வனத்தலை​வர் கே.ஜே.​ராம், சிஎஸ்​ஐஆர் - எஸ்​இஆர்சி இயக்​குநர் என்​.ஆனந்​தவல்லி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​கின்​றனர்​.

நடப்பாண்டில் 18 செயற்கைக்கோள்கள் ஏவப்படும்: மத்திய இணையமைச்சர் தகவல்
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிஎன்பி கட்சி: இந்தியா உடனான உறவைப் பேண விருப்பம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in