“சமூக நீதி என்ற பெயரில் மத அரசியல் செய்கிறதா தவெக அரசு?” - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் | கோப்புப்படம்

நயினார் நாகேந்திரன் | கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: ‘இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய, தமிழகத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என கூறியுள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது. ‘சமூக நீதி’ என்ற பெயரில் தவெக அரசு மத அரசியல் செய்கிறதா?’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘மதத்தின் அடிப்படையில் எவ்வித பாகுபாடும் கிடையாது என்ற இந்திய அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிராக, ‘இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய, தமிழகத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்’ என கூறியுள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது.

மத ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக கடந்த 2024-ம் ஆண்டு திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ‘ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதனால் மட்டுமே அவர் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர் ஆகிவிட முடியாது’ எனவும், ‘சமூகத்தின் பின்தங்கிய நிலை என்பது ஒரு தனிநபரின் சொத்து அல்ல; அது குறிப்பிட்ட சமூக அமைப்போடு தொடர்புடையது’ எனவும் கடந்த அக்டோபர் மாதம் தான் தெளிவான தீர்ப்பை வழங்கியது.

அப்படியிருந்தும், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக, மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாநிலச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் என தவெக அமைச்சர் கூறுவது, தேசத்தின் நடுநிலைத் தன்மைக்கு விடப்படும் நேரடிச் சவால்.

ஏற்கெனவே முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றத்தை, ‘சிக்கந்தர் மலை’ என்று கூறி ஒருபுறம் இஸ்லாமிய சமூகம் போரடிக் கொண்டிருக்கையில், ‘இஸ்லாம் மதத்திற்கு மாறினால், இட ஒதுக்கீடு’ என்ற ரீதியில் தவெக அமைச்சர் உறுதியளிப்பது, சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும். மேலும், இது கட்டாய மதமாற்றத்தையும், சலுகைகளுக்காக மட்டுமே மதம் மாறும் அவலத்தையும் சமூகத்தில் ஊக்குவிக்கும்.

இதனால், பாரம்பரிய இஸ்லாமிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு பலன்களும், மற்ற மதங்களின் சமூக நிலைத்தன்மையும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, வாக்கு வங்கி அரசியலுக்காக சமூகத்தின் தரம் மற்றும் நிலைத்தன்மையில் முதல்வர் தவெக சமரசம் செய்யக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன் | கோப்புப்படம்</p></div>
சென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தவெக பிரமுகர்கள் இருவர் கைது

X