“காவல் துறையும் முதல்வர் விஜய் போலவே ஓய்வில் இருக்கிறதா?” - கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி

Updated on
1 min read

சென்னை: ‘தமிழகத்தில் காவல் துறை செயல்படுகிறதா அல்லது அதுவும் முதல்வர் விஜய் போலவே ஓய்வில்தான் இருக்கிறதா?’ என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.

ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழகத்தின் வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் குற்றங்களின் எண்ணிக்கையை உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.

தமிழக மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழக அரசு?

தமிழகத்தில் காவல் துறை செயல்படுகிறதா? அல்லது அதுவும் முதல்வரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

<div class="paragraphs"><p>கனிமொழி எம்.பி</p></div>
விஜய் சேதுபதி பகிர்ந்த ஹாலிவுட் ‘மகாராஜா’ விருப்பம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in