

படம்:ர.செல்வமுத்துகுமார்
ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்ப் பதை விரைந்து இறுதி செய்து, கூட்டணியை வலிமைப்படுத்தி தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து, காரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள நட்சத்திர ஓட்ட லுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் பாஜக மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக தலைவர்கள் எல்.முருகன், அரவிந்த்மேனன், சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன், பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அமித்ஷா, கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பதை அதிமுக பார்த்து கொள்ளும். ஓபிஎஸ் உடனான கூட்டணியை உடனடியாக இறுதி செய்யுங்கள். கூட்டணியை வலி மைப்படுத்தி தேர்தல் பணி களை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று கறாராக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், நேற்று காலை ஓட்டலில் இருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டார். அங்கு பொதுக்கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின், ஹெலிகாப்டர் மூலம் மாலை 6 மணியளவில் மீண்டும் திருச்சிக்கு திரும்பிய அவர், தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.