பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

விழுப்புரம்: தமிழகத்​தில் பத்​தாம் வகுப்பு மற்​றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுநடை​பெறுகிறது. இதில், பிளஸ் 2 வேதி​யியல் தேர்வு கடந்த 9-ம் தேதி நடை​பெற்​றது. விழுப்​புரத்​தில் உள்ள இரு பிரபல தனி​யார் பள்​ளி​களில் அமைக்​கப்​பட்​டிருந்த தேர்வு மையத்​தில் முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளன.

இரு மையங்​களி​லும் விடைகள் அச்​சிடப்​பட்ட காகிதங்​களை பார்த்து மாணவர்​கள் தேர்வு எழு​தி​ய​தாக​வும், இதனை பார்த்த நிலை​யான பறக்​கும் படை​யினர், நடவடிக்கை எடுக்​காமல் திரும்பி விட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. இதுகுறித்து பள்​ளி​கல்​வித் துறைக்கு புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​பேரில் அந்த மையங்​களில் கண்காணிப்பு பணிக்​குச் சென்ற இரு பெண் ஆசிரியர்​கள் உட்பட 5 ஆசிரியர்​களிடம் விளக்​கம் கேட்டு முதன்மை கல்வி அலு​வலர் அறிவழகன் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்​ட​போது, “நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அவர்​களது பதிலைப் பெற்ற பிறகு, உரியநடவடிக்கை எடுக்​கப்படும்” என்​றார். விழுப்​புரம் மாவட்​டம், செஞ்​சி​யில் உள்ள தேர்வு மையம் ஒன்​றில், கடந்​த ஆண்டு பிளஸ் 2 வேதி​யியல் தேர்​வில், ஒரு பள்​ளியில் அனைத்து மாணவர்​களும் 100 மதிப்​பெண்​கள் பெற்​றது சர்ச்சையானது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
எங்கே இருக்கிறார் நெதன்யாகு? - ‘ஆறு விரல்’ வீடியோவால் சர்ச்சை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in