இடுக்கு பிள்ளையார் கோயிலில் இரும்பு தடுப்பு: பக்தர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடவடிக்கை

இடுக்கு பிள்ளையார் கோயில் வாசல் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள்.

இடுக்கு பிள்ளையார் கோயில் வாசல் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள்.

Updated on
1 min read

திருவண்ணாமலை: ​திரு​வண்​ணா​மலை இடுக்கு பிள்ளையார் கோயில் குகையில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரும்பத் தடுப்பு அமைக்கப்பட்டதுடன், எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள கிரிவல பாதை​யில் இடுக்கு பிள்​ளை​யார் கோயில் உள்​ளது. இக்​கோயி​லில் சிறிய குகை போன்ற அமைப்​பில், ஒருக்​களித்து படுத்​த​வாறு உள்ளே நுழைந்​து, பக்கவாட்டில் உள்ள விநாயகரை வணங்கி முன் வாசல் வழி​யாக வெளியே வரவேண்​டும்.

இந்​நிலை​யில், இக்​கோயி​லில் கடந்த 24-ம் தேதி நள்​ளிரவு ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த பக்​தர் தாசரிமணி​கு​மார் என்​பவர் கோயிலுக்​குள் சென்று வெளியே வர முடியாமல் உயிரிழந்தார். இச்​சம்​பவத்தை தொடர்ந்​து, அண்​ணா​மலை​யார் கோயில் நிர்​வாகம் சார்​பில் நேற்று கோயில் முன்பு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

அதில் உடல் பரு​மன் உள்​ளவர்​கள், வயதானவர்​கள், மூச்சு பிரச்​சினை உள்​ளவர்​கள் மற்​றும் உடல்நல குறைவானவர்கள் இடுக்கு பிள்​ளை​யார் கோயில் துவாரம் வழி​யாகச் செல்ல அனு​மதி இல்லை என்று அறி​விப்பு வெளியிடப்பட்​டுள்​ளது.

மேலும் வாசல் அருகே 2 கம்​பிகள் வைத்து தடுப்பு ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த 2 கம்​பிகளுக்கு இடையே உள்ள இடைவெளி​யில் நுழைந்து உள்ளே வரும் பக்​தர்​கள் மட்டுமே இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல முடி​யும். மேலும் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு பவுர்ணமி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>இடுக்கு பிள்ளையார் கோயில் வாசல் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள்.</p></div>
“பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் கடும் தாக்குதல்” - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in