

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தொடர்புடைய டி.ஆர்.ரத்தீஷூக்கு இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், போக்குவரத்து மற்றும் பார் உரிமம் வழங்கியதில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியான ரத்தீஷ், மதுபானநிறுவனங்களுக்கு அனுமதிவழங்கியதிலும், நிர்வாகரீதியிலான இடமாற்றங்களிலும் அதி காரப்பூர்வமற்ற முறையில் தலையிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்தாண்டு அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஏற்கெனவே அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாடு தப்பிய ரத்தீஷூக்கு எதிராக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல் சார்பிலும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.