ஸ்ரீராமச்சந்திராவில் சர்வதேச செவித்திறன் மாநாடு: சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது தொடங்கி வைத்தார்

ஸ்ரீராமச்சந்திராவில் சர்வதேச செவித்திறன் மாநாடு: சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது தொடங்கி வைத்தார்
Updated on: 
1 min read

சென்னை: ஸ்ரீராமச்​சந்​திரா நிறு​வனத்​தில் 3 நாள் சர்​வ​தேச செவித்​திறன் மாநாட்டை சுகா​தா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது தொடங்கி வைத்​தார்.

மருத்​து​வர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள், செவித்​திறன் நலன் ஆய்வாளர்​கள் மற்​றும் செவித்​திறன் குறை​பாடு உள்​ளவர்​களை உள்ளடக்​கிய உலகளா​விய செவித்​திறன் நலக்​கூட்​டமைப்​பின் 16-வது சர்​வ​தேச மாநாடு, போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா உயர்​கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் நேற்று தொடங்​கியது. இந்தியாவில் இந்த மாநாடு நடை​பெறு​வது இதுவே முதல் முறையாகும். மூன்று நாட்​கள் நடை​பெறும் மாநாட்டை தமிழக அரசின் சுகா​தா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது துவக்கி வைத்தார்.

இதில் ஆசி​யா, ஆப்​பிரிக்கா மற்​றும் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 27 நாடு​களி​லிருந்து 250 மருத்​து​வர்​கள் பங்கேற்​றனர். இவர்​களோடு பேச்​சு, மொழி மற்​றும் கேட்​பியல் துறை நிபுணர்​கள், காது கேளாதோருக்​கான வழி​காட்​டிகள், சிறப்பு கல்​வி​யாளர்​கள், பயிற்சி பெற்ற பெற்​றோர்​கள் மற்​றும் சமூக பணி​யாளர்​கள் பலரும் பங்​கேற்​று, குறைந்த மற்​றும் நடுத்தர வரு​மானம் கொண்ட நாடு​களில் செவித்​திறன் நலனை மேம்​படுத்​து​வது குறித்து விவா​தித்​தனர். மேலும், பாதிக்கப்பட்டோரின் நேரடி அனுபவப் பகிர்​வு, ஆய்​வறிக்​கைகள் சமர்ப்​பிப்பு மற்​றும் மறு​வாழ்வு முறை​களுக்​கான சிறப்​புப் பயிற்சிகளும் வழங்​கப்​பட்​டன.

மாநாட்​டில் சுகா​தா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது பேசியதாவது: உலகள​வில் அன்​றாட வாழ்க்​கையை பாதிக்​கும் அளவி​லான செவித்​திறன் குறை​பாட்​டுக்​கு, 43 கோடிக்​கும் மேற்பட்​டோருக்கு மறு​வாழ்வு சிகிச்சை தேவைப்​படு​கிறது. இளைஞர்​கள் இயர்​போன்​களை அளவுக்கு அதி​க​மாக பயன்படுத்து​வ​தா​லும், தொழிலா​ளர்​கள் அதிக சத்​த​முள்ள இடங்களில் தொடர்ந்து பணிபுரிவ​தா​லும் செவித்​திறனை இழக்கின்​றனர். தமிழகத்​தில் முதல்​வரின் விரி​வான மருத்​துவ காப்​பீட்டு திட்​டத்​தின் கீழ் பொருளா​தார வசதி​யில்​லாத குழந்தைகளுக்கு காக்​ளியர் இம்ப்​ளாண்ட் சிகிச்சை இலவச​மாக வழங்​கப்​படு​கிறது.

இது​வரை 4000-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் பயனடைந்​துள்ளனர். இலவச​மாக செவிப்​பொறிகளும் வழங்​கப்​படு​கின்​றன. இந்த மாநாட்​டில் பங்​கேற்​கும் தொழிற்​துறை​யினரும், ஆய்​வாளர்​களும் இணைந்து அனை​வருக்​கும் எளி​தில் கிடைக்​கக் ​கூடிய வகை​யில் செவித்​திறன் பராமரிப்பு உபகரணங்​களை தயாரிக்க முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொடர்ந்து பேசிய உலக சுகா​தார அமைப்​பின் காது மற்​றும் செவித்​திறன் பராமரிப்​புப் பிரிவு தொழில்​நுட்​பத் தலை​வர் ஷெல்லி சத்​தா, “காது மற்​றும் செவித்​திறன் தொடர்​பான பிரச்சினை​களை சிறப்பு பயிற்சி பெற்ற மருத்​துவ நிபுணர்​கள் மற்​றும் சுகா​தார பணி​யாளர்​களின் உதவி​யுடன் ஆரம்ப நிலையிலேயே கண்​டு​பிடித்து மருத்​துவ பராமரிப்பு சேவை​களை வழங்க வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​னார்.

இந்​நிகழ்​வில் உலகளா​விய செவித்​திறன் நலக்​கூட்​டமைப்​பின் இயக்​குநர்​கள் ஜேம்ஸ் சாண்​டர்​ஸ், டேவிட் மோல்​டர்,  ராமச்சந்திரா கல்வி மற்​றும் சுகா​தார அறக்​கட்​டளை​யின் அறங்காவலர் சம்​புத்தா வெங்​க​டாசலம், இணை துணைவேந்​தர் மகேஷ் வக்​க​முடி, கேட்​பியல் மற்​றும் பேச்சு மொழித்​துறை முதல்வர் பிர​காஷ் பூமி​நாதன், மா​நாட்​டின் அமைப்​புச்​ செயலர்​ பேராசிரியர்​ வித்​யா ராம்​கு​மார்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

ஸ்ரீராமச்சந்திராவில் சர்வதேச செவித்திறன் மாநாடு: சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமது தொடங்கி வைத்தார்
சென்னை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in