உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை
Updated on
1 min read

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நடத்தப்பட்டு வரும் வழக்கறிஞர்கள் கூட்​டுறவு சங்​கத்​துக்கு கடந்த 7 ஆண்​டு​களாக தேர்​தல் நடத்​தப்​ப​டாத நிலை​யில், வழக்கறிஞர்கள் கூட்​டுறவு சங்​கம் தனி அதி​காரி​யின் கட்​டுப்பாட்​டின் கீழ் இயங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில், இந்த சங்​கத்​துக்​கான தேர்​தலை நடத்​தக் கோரி வழக்​கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி வி.லட்​சுமி நாராயணன், வழக்கறிஞர்கள் கூட்​டுறவு சங்​கத்​துக்​கான உறுப்​பினர் பட்​டியலை இறுதி செய்து தேர்​தலை நடத்த வழக்கறிஞர்கள் எல்​.சந்​திரகு​மார், ஆர்​.செல்​வம், ஆர்​.கிருஷ்ணகு​மார், திரு​வேங்​கடம், பர்​வீன் ஆகியோர் அடங்​கிய குழுவை அமைத்து உத்​தர​விட்​டிருந்​தார்.

அதன்​படி, இறுதி வாக்​காளர் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டு, கூட்​டுறவு சங்​கங்​களின் தேர்​தல் ஆணைய உத்​தர​வுப்​படி 2026 ஜன.28-ம் தேதி தேர்​தல் நடத்​தப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், உயர் நீதி​மன்ற வழக்கறிஞர்கள் கூட்​டுறவு சங்​கத்​துக்​கான தேர்​தலை எதிர்த்து கூட்​டுறவு சங்க தனி அதி​காரி தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், பி.தன​பால் அமர்​வில் இந்த மேல்​முறை​யீட்டு வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, கூட்​டுறவு சங்க தனி அதி​காரி தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எல்​.பி.சண்​முகசுந்​தரம், “வழக்கறிஞர்கள் கூட்​டுறவு சங்க தேர்​தல் தொடர்​பான வழக்கை தனி நீதிபதி விசா​ரிக்க முடி​யாது. தேர்​தலை நடத்த தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு செல்​லாது” என்று வாதிட்​டார்.

இதையடுத்து நீதிப​தி​கள், வழக்கறிஞர்கள் கூட்​டுறவு சங்க தேர்​தலுக்கு இடைக்​காலத் தடை வி​தித்​து, இதுதொடர்​பாக எதிர்​மனு​தா​ரர்​கள் பதில் அளிக்​க உத்​தர​விட்​டுள்​ளனர்​.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு இடைக்காலத் தடை
கடலோர தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in