அதிகார துஷ்பிரயோகத்தை அனுமதிக்க முடியாது: சவுக்கு சங்கருக்கு 17 வழக்குகளில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு

அதிகார துஷ்பிரயோகத்தை அனுமதிக்க முடியாது: சவுக்கு சங்கருக்கு 17 வழக்குகளில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு
Updated on
2 min read

சென்னை: பிரபல யூடியூப​ரான சவுக்கு சங்​கரை குறி வைத்து கைது செய்துபோலீ​ஸார் அதி​கார துஷ்பிரயோகத்​தில் ஈடு​படு​வதை அனு​ம​திக்க முடி​யாது என அரசுக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், அவருக்கு 17 வழக்​கு​களில் வரும் மார்ச் வரை 12 வாரங்​களுக்கு இடைக்​கால ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளனர்.

சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யும், பிரபல யூடியூபரு​மான சவுக்கு சங்​கரை ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் பதிவு செய்த வழக்​கு​களில் போலீ​ஸார் கடந்த டிச.13-ம் தேதி கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இந்​நிலை​யில் சவுக்கு சங்​கரின் தாயார் கமலா, உயர் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு​ தாக்​கல் செய்​தார். அதில் எனது மகன் சவுக்கு சங்​கர் தமிழக அரசின் செயல்​பாடு​களை​யும், முறை​கேடு​களை​யும் விமர்​சித்து வரு​வ​தால் பழி​வாங்​கும் வித​மாக ஒன்​றன் பின் ஒன்​றாக போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து கைது செய்து வரு​கின்​றனர்.

அரசின் காழ்ப்​புணர்ச்​சி​யால், போலீ​ஸார் உள்​நோக்​கத்​துடன் பொய் வழக்​கு​களைஜோடித்து தனிமை சிறை​யில்அடைத்​துள்​ளனர். எனது மகனுக்கு இருதய நோயும், நீரழிவு நோயும் உள்​ளது. தொடர்சிகிச்​சைகளுக்காக ஜாமீன் வழங்குமாறு கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், பி.தன​பால் அடங்​கிய விடு​முறை காலஅமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது சவுக்கு சங்​கர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் மு.​ராமமூர்த்​தி, “பழி​வாங்​கும் நோக்​கில் தொடர்ச்​சி​யாக கைது செய்து வரு​கின்​றனர். கடந்த டிச.12-ம் தேதி மாலை திடீரென ஒரு தொகையை சவுக்கு சங்​கரின் அலு​வல​கத்​தில் பணிபுரி​யும் நபருக்கு ஜிபே மூல​மாக அனுப்​பி​விட்​டு, டிச.12-ம் தேதி எப்​ஐஆர் போட்​டு, 13-ம் தேதி யாரையோ மிரட்​டிய​தாகக்​ கூறி கைது செய்​துள்​ளனர். அவருக்கு சிறை​யில் மருத்​துவ சிகிச்​சைகள் அளிக்​கப்​பட​வில்லை" என வாதிட்​டார்.

இதற்கு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் எம்.சுரேஷ்கு​மார் அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட பின்னர் நீதிப​தி​கள் பிறப்​பித்​த உத்​தர​வு: அரசை விமர்​சிக்​கிறார் என்​ப​தற்​காக ஒரு நபரை குறி​வைத்து தொடர்ந்து கைது செய்து போலீ​ஸார் அதி​கார துஷ்பிரயோகத்​தில் ஈடு​படு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது. அவரை அடுத்​தடுத்து கைது செய்ய வேண்​டுமென்​கிற போலீ​ஸாரின் ஆர்​வம் சந்​தேகம் கொள்ள வைக்​கிறது.

காவல்​துறை​யின் இது​போன்ற செய்​கை​யால் தேவையற்ற பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன. இதன்​மூலம் கருத்து சுதந்​திரம் மட்​டுமின்றி தனிமனித சுதந்​திர​மும் அப்​பட்​டமாக மீறப்பட்​டுள்​ளது. காவல்​துறை அதிகாரி​கள் தங்​களது கடமை​யில் இருந்து ஒரு​போதும் தடம் மாறக்​கூ​டாது. எனவே,சவுக்கு சங்கரின் உடல்​நிலை மற்​றும் மருத்​து​வக்காரணங்​களை கருத்​தில் கொண்டு அவர் மீது தற்​போது பதி​யப்​பட்​டள்ள 2 வழக்​கு​கள் உள்பட சென்​னை, காஞ்​சிபுரம், திருச்சி என பல்​வேறு இடங்​களில் பதி​யப்​பட்​டுள்ள 17 குற்ற வழக்​கு​களில் அவருக்கு மார்ச் 25-ம் தேதி வரை 12 வாரங்​களுக்கு நிபந்​தனை​களு​டன் இடைக்கால ஜாமீன் வழங்​கப்​படு​கிறது.

இந்த இடைப்​பட்ட காலத்​தில் அவர் விசா​ரணைக்கு ஒத்​துழைக்க வேண்​டும். ரூ. 1 லட்​சத்தை பிணைத்​தொகை​யாக செலுத்த வேண்​டும். வெளி​நாடு​களுக்கு செல்​லக்​கூ​டாது. இவ்​வாறு உத்​தர​விட்​டனர்.

மற்​றொரு வழக்​கில் ஜாமீன்: யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீ​ஸாரை அவதூறாக பேசி​ய வழக்கில் ஜாமீனில் வந்​தார். மீண்​டும் தன்னை இழி​வாக பேசி​ய​தாக திருச்​சி​யைச் சேர்ந்த ராஜ​ராஜேஸ்​வரி என்ற காவலர் புகார் செய்​தார். அதன்​பேரிலான வழக்​கில் திருச்சி நீதி​மன்​றத்​தில் சவுக்குசங்கரை போலீ​ஸார் ஆஜர்​படுத்​தினர். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி அனுஸ்​ரு​தி, சவுக்கு சங்​கரின் சொந்த ஜாமீனில் விடு​வித்​து உத்​தர​விட்​டார்​.

அதிகார துஷ்பிரயோகத்தை அனுமதிக்க முடியாது: சவுக்கு சங்கருக்கு 17 வழக்குகளில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு
“கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றிபெறும்” - செந்தில்பாலாஜி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in