

சென்னை: சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்கா விளையிலும், கேரள மாநிலம் சபரிமலையிலும் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் 2027 ஜன.20-ம் தேதி வரை செயல்படும். சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தை 9894433179, 8760668834, 9486270443 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை அறியலாம்.
தமிழக பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.