முரசு புயல் எதிரொலி: அலையின் சீற்றம் அதிகரிப்பு - கடலில் இறங்க மக்களுக்கு தடை

‘முரசு’ புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அலைகளின் சீற்றம் நேற்று அதிகமாக இருந்தது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

‘முரசு’ புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அலைகளின் சீற்றம் நேற்று அதிகமாக இருந்தது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on: 
1 min read

சென்னை: வங்​கக்​கடலில் உரு​வான முரசு புயல் காரண​மாக சென்னை கடற்​கரைப் பகுதி​களில் கடல் சீற்​றம் அதி​கரித்து ராட்​சத அலைகள் எழும்​பு​கிறது.

இத​னால் மெரினா உள்​ளிட்ட கடற்​கரைப் பகுதி​களில் பொது​மக்​கள் கடலில் இறங்க சென்னை காவல்​துறை தடை விதித்​துள்​ளது.

வங்​கக்​கடலில் உரு​வான முரசு புயல் காரண​மாக சென்னை உள்​ளிட்ட வட தமிழக கடலோரப் பகுதி​களில் காற்று வேக​மாக வீசி வரு​கிறது. இதன் காரண​மாக கடல் கொந்​தளிப்​புடன் காணப்​படு​கிறது.

கடற்​கரையில் வழக்​கத்​தைவிட அதிக உயரத்​தில் ராட்​சத அலைகள் எழும்பி கரையை நோக்கி வேக​மாக வந்து மோதுகின்​றன.

இத​னால் மெரினா, பட்​டினப்​பாக்​கம், பெசன்ட் நகர் உள்​ளிட்ட கடற்​கரைப் பகுதி​களில் பொது​மக்​கள் கடலில் இறங்கி குளிக்​கவோ, நீந்​தவோ கூடாது என்று போலீ​ஸார் எச்​சரித்​துள்​ளனர்.

கடற்​கரையில் அலைகள் வந்து மோதும் பகுதி​களுக்கு அரு​கில் நின்று வேடிக்கை பார்ப்​ப​தையும் தவிர்க்க வேண்​டும். பெற்​றோர் தங்​களது குழந்​தைகளை கடல் அருகே சென்று விளை​யாட அனுமதிக்​கக் கூடாது.

புகைப்​படம், செல்பி எடுப்​ப​தற்​காக ஆபத்​தான பகுதி​களுக்​குச் செல்​லக் கூடாது என்​றும் தெரி​வித்​துள்​ளனர். கடலோரப் பகுதி​களில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்ள போலீ​ஸார் மற்​றும் உயிர்​காப்​புப் பணி​யாளர்​கள் பொது​மக்​களுக்கு தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வரு​கின்​றனர்.

காற்று வேக​மாக வீசி வரும் சூழலில் தேவையற்ற கடற்​கரைப் பயணங்​களை பொது​மக்​கள் தவிர்க்க வேண்​டும் என்று சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் அறி​வுறுத்தி உள்​ளார். அவசர காலங்​களில் காவல்​துறை​யின் உதவி தேவைப்​பட்​டால் 100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்​ளலாம் என்​றும் தெரிவித்துள்ளார்.

முரசு புயல் காரண​மாக சென்​னை​யில் 5 விமானங்​களின் புறப்​பாடு, 6 விமானங்​களின் வருகை என, மொத்​தம் 11 விமானங்​களின் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன.

<div class="paragraphs"><p>‘முரசு’ புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் அலைகளின் சீற்றம் நேற்று அதிகமாக இருந்தது. | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?

X