

கோப்புப்படம்
சென்னை: மின் பகிர்மான கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தியது. இந்த ஆணையை பின்பற்றி தமிழ்நாடு மின்பகிர்மான கழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 2025 ஜூலை 1 முதல் அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளது.
அகவிலைப்படி நிலுவைத் தொகையை பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் நவம்பர் மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.