சென்னை, மதுரை, பழநியில் இயங்கிவரும் கருத்தரிப்பு மையங்களில் வருமானவரித் துறையினர் சோதனை

சென்னை, மதுரை, பழநியில் இயங்கிவரும் கருத்தரிப்பு மையங்களில் வருமானவரித் துறையினர் சோதனை
Updated on
1 min read

சென்னை: சென்​னை, மதுரை, பழநி​யில் உள்ள பிரபல கருத்​தரிப்பு மையங்​களில் வரு​மானவரித் துறை சோதனை நடை​பெற்​றது.

தமிழகத்​தில் அண்​மைக்​கால​மாக வரிஏய்ப்பு புகார்​களுக்கு உள்​ளாகும் தனி​யார் நிறு​வனங்​களில் வரு​மானவரித் ​துறை அதி​காரி​கள் தொடர் சோதனை​ மேற்​கொண்டு வரு​கின்​றனர். இதன் ஒருபகு​தி​யாக, சென்னை மற்​றும் மதுரை​யில் செயல்​பட்டுவரும் பிரபல கருத்​தரித்​தல் மையங்​களில் நேற்று வருமானவரித்​துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

சென்​னை​யில் கீழ்ப்​பாக்​கம், மதுர​வாயல், மாதவரம், சேத்​துப்​பட்​டு, பெரம்​பூர், அடை​யாறு, தரமணி, வேளச்​சேரி உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள பிரபல கருத்​தரிப்பு மையங்​களில் இந்​தச் சோதனை நடந்தது. இதே​போல் மதுரை​யில் உள்ள இந்த மையங்​களின் கிளை​களி​லும் அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். ஒட்​டுமொத்​த​மாக சென்னை மற்​றும் மதுரை​யில் சுமார் 20-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் இந்​தச் சோதனை நடத்​தப்​பட்​டது.

செயற்கை கருத்​தரிப்பு மையங்​கள், அதனுடன் இணைந்த பரிசோதனைக்​கூடங்​கள் மற்​றும் ஆராய்ச்சி மையங்​களில் அதி​காரி​கள் தீவிர சோதனை​யில் ஈடு​பட்​டனர். இது​மட்​டுமின்​றி, அந்த நிறு​வனங்​களின் உயர் அதி​காரி​கள், முக்​கிய மருத்​து​வர்​கள் மற்​றும் நிறு​வனர்​களின் வீடு​களி​லும் சோதனை விரிவுபடுத்​தப்​பட்​டது.

அசம்​பா​விதங்​களைத் தவிர்க்க சோதனை​யின்​போது துப்​பாக்கி ஏந்​திய போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர். கடந்த சில மாதங்​களுக்கு முன்பு சில தனி​யார் கருத்​தரிப்பு மையங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் கிடைத்த ரகசி​யத் தகவல்​களின் அடிப்​படை​யிலேயே தற்​போதைய நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

குறிப்​பாக, கடந்த 5 ஆண்​டு​களில் மேற்​கொள்​ளப்​பட்ட கருத்​தரிப்பு சிகிச்​சைகள் எத்​தனை, அதற்​காகப் பெறப்​பட்ட கட்​ட​ணங்​கள் எவ்​வளவு, வசூலிக்​கப்​பட்ட தொகைக்கு முறை​யாக வரு​மான வரி செலுத்​தப்​பட்​டுள்​ள​தா, சிகிச்​சைக்கு வரும் நபர்​களுக்கு முறை​யான ரசீதுகள் வழங்​கப்​படு​கின்​றனவா என்பன போன்ற பல்​வேறு கோணங்​களில் அதி​காரி​கள் ஆவணங்​களைச் சரி​பார்த்​தனர்.

இதேபோல், பழநியில் உள்ள திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கருத்தரிப்பு மையத்துக்கு நேற்று காலை வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை வரை தொடர்ந்த இந்தச் சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இந்​தச் சோதனை​களின்​போது கணக்​கில்​வ​ராத பெரு​மளவி​லான ரொக்​கப் பணம், முக்​கிய நிதிப்​பரிவர்த்​தனை ஆவணங்​கள், வங்​கிக் கணக்கு விவரங்​கள் மற்​றும் கணினி, ஹார்ட் டிஸ்க்​கு​கள் உள்​ளிட்ட டிஜிட்​டல் சான்​றுகளை அதி​காரி​கள் கைப்​பற்​றி ​உள்​ள​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​தச் சோதனை​கள் முழு​மை​யாக நிறைவடைந்த பின்​னரே, கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் மற்​றும் வரிஏய்ப்பு குறித்த முழு​மை​யான விவரங்​கள் தெரிய​வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

சென்னை, மதுரை, பழநியில் இயங்கிவரும் கருத்தரிப்பு மையங்களில் வருமானவரித் துறையினர் சோதனை
“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்வார்” - நாராயணசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in