நெல்லையில் வருமானவரி சோதனை: ரூ.2 கோடி நகை, பணம் பறிமுதல்

நெல்லையில் வருமானவரி சோதனை: ரூ.2 கோடி நகை, பணம் பறிமுதல்
Updated on
1 min read

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி​யில் தேர்​தல் பறக்​கும் படை​யினர் மற்​றும் வரு​மான வரித்​துறை​யினர் நடத்​திய சோதனை​யில் ஒரு வீட்​டிலிருந்து ரூ.2 கோடி மதிப்​பிலான நகை மற்​றும் ரொக்​கம் கைப்​பற்​றப்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு தேர்​தல் பறக்​கும் படை​யினரும், வரு​மானவரித் துறை​யினரும் தீவிர கண்​காணிப்பு மற்​றும் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கிறார்​கள். பாளை​யங்​கோட்​டை​யில் ஒரு வீட்​டில் வரு​மானவரித் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். அந்த வீட்​டில், முறை​யான ஆவணங்​கள் இல்​லாமல், ரூ.25 லட்​சம் ரொக்​கம், ரூ.1.78 கோடி மதிப்​பிலான 1,250 கிராம் தங்க நகைகள் ஆகியவை பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது. அவற்றை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

இதுதொடர்​பாக மாவட்ட தேர்​தல் பிரிவு வெளி​யிட்ட செய்​திக் ​குறிப்​பில், ‘திருநெல்​வேலி மாவட்​டத்​தில் வரு​மான வரித் துறை அதி​காரி​கள் தீவிர சோதனை நடத்தி ரொக்​கம் மற்​றும் பொருட்​களை மீட்​டுள்​ளனர். பாளையங்​கோட்டை மற்​றும் நாங்​குநேரி தொகு​தி​களில் இது​வரை ரூ.1.41 கோடி ரொக்​க​மும், ரூ.1.80 கோடி மதிப்​பிலான தங்​கம் உள்​ளிட்ட பொருட்​களும் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன’ என கூறப்பட்​டுள்​ளது.

நெல்லையில் வருமானவரி சோதனை: ரூ.2 கோடி நகை, பணம் பறிமுதல்
“சுயநலத்துக்காக தமிழக உரிமைகளை காவு கொடுக்க துணிந்த பழனிசாமி” - முதல்வர் ஸ்டாலின் சாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in