தனியார் நிறுவனம், வைர நகைக்கடை தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

தனியார் நிறுவனம், வைர நகைக்கடை தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை
Updated on
1 min read

சென்னை: வைர நகைக்கடை மற்​றும் தனி​யார் நிறு​வனம் தொடர்​புடைய 30-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் நேற்று சோதனை​யில் ஈடு​பட்​டனர். இதில், முக்​கிய ஆவணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

சென்னை தியாக​ராயநகர், பசுல்லா சாலை​யில் பிரபல​மான தனி​யார் நிறு​வனம் ஒன்று செயல்​படு​கிறது. இந்​நிறு​வனம் ரசாயனங்​கள், நிலக்​கரி மற்​றும் சாம்​பல் கையாளுதல், புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி மற்​றும் மின்​சார வாக​னங்​கள் உள்பட பல்​வேறு துறை​களில் ஈடு​பட்டு வரு​கிறது.

காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் இதன் தொழிற்​சாலை உள்​ளது. இந்​நிலை​யில், இந்​நிறு​வனம் வரி ஏய்ப்​பில் ஈடு​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. அதன் அடிப்​படை​யில் வருமானவரித்​துறை அதி​காரி​கள் இதன் அலு​வல​கங்​கள் மற்​றும் அவை தொடர்​புடைய இடங்​களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.

குறிப்​பாக சென்​னை, நுங்​கம்​பாக்கம் வள்​ளுவர் கோட்​டம் சாலை​யில் உள்ள அலு​வல​கம், தி.நகர் பசுல்லா சாலை​யில் உள்ள தலைமை அலு​வல​கம், காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள தொழிற்​சாலை உள்​ளிட்ட இடங்​களில் 100-க்​கும் மேற்​பட்ட வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர்.

இதே​போல், சென்னை அபிராமபுரம் முதல் குறுக்கு தெரு​வில் உள்ள தனி​யார் அலு​வல​கம் மற்​றும் தியாக​ராய நகர் ஜி.என்​.செட்டி சாலை​யில் உள்ள வைர நகைகள் விற்​பனை செய்​யும் ஜுவல்​லரி உள்பட 30-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் சோதனை​யிட்​டனர்.

அதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் மற்​றும் சொத்து பத்​திரங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதுகுறித்து வரு​மான வரி அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள், சொத்து பத்​திரங்​கள், எவ்​வளவு வரி ஏய்ப்பு நடந்​துள்​ளது என்பன போன்ற விவரங்​கள் சோதனை முடிவடைந்த பின்​னர் வெளி​யிடப்​படும்​’ என்​றனர்​.

தனியார் நிறுவனம், வைர நகைக்கடை தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித் துறை சோதனை
சென்னை விமான நிலையத்தில் 8-வது நாளாக 41 விமானங்கள் ரத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in