கொடைக்கானலில் காவலர் ரகளை செய்த சம்பவம்: மருத்துவர்களிடம் வருத்தம் தெரிவித்த மாவட்ட எஸ்.பி.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் காவலர் தங்கப்பாண்டி ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக நேரில் விசாரித்த எஸ்பி ஜெயக்குமார்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் காவலர் தங்கப்பாண்டி ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக நேரில் விசாரித்த எஸ்பி ஜெயக்குமார்.

Updated on
1 min read

பழநி: கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து காவலர் ஒருவர் பொருட்களை சேதப்ப டுத்தி, ரகளையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து நேரில் விசாரித்து, மருத்துவர்களிடம் எஸ்பி ஜெயக் குமார் வருத்தம் தெரிவி த்தார்.

கடந்த ஜூலை 23-ம் தேதி இரவு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்த காவலர் தங்கப் பாண்டி (42), அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி, ரகளையில் ஈடுபட்டார்.

அதோடு, அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தங்கப் பாண்டி கைது செய்யப் பட்டார். மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஜெயக் குமார் உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வந்த எஸ்பி ஜெயக்குமார், ரகளை சம்பவம் குறித்து மருத்துவர்கள், செவிலி யர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, காவலர் தங்கப்பாண்டி சேதப் படுத்திய மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டு, அவற்றை உடனடி யாக சரிசெய்து கொடுக்க கொடைக்கானல் போலீ ஸாருக்கு அறிவுறுத் தினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவப் பணியாளர் களிடம் எஸ்பி வருத்தம் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் காவலர் தங்கப்பாண்டி ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக நேரில் விசாரித்த எஸ்பி ஜெயக்குமார். </p></div>
அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும்: போக்குவரத்துத் துறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in