வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் மறுஉத்தரவு வரும் வரை போலீஸாருக்கு விடுப்பு கிடையாது

டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் மறுஉத்தரவு வரும் வரை போலீஸாருக்கு விடுப்பு கிடையாது
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியை முன்னிட்டு மே 2 முதல் மறு உத்தரவு வரும் வரை போலீஸாருக்கு விடுப்பு கிடையாது என டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் தமிழக காவல் துறையினர், துணை ராணுவப்படையினர் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் திமுக, அதிமுக-பாஜக, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது. அன்றைய தினம், வெற்றி பெறுபவர்கள் கொண்டாட்டத்திலும், தோல்வி அடைபவர்கள் ஏமாற்றமும் அடைவார்கள்.

இதனால் தொண்டர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கில் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தீவிரப்படுத்தி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘‘சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகளவு போலீஸார் களப்பணியாற்ற வேண்டியுள்ளது.

எனவே, 2-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.

மகப்பேறு, குழந்தை பராமரிப்பு, படிப்பு, அவசர காலம் மற்றும் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். விடுமுறையில் இருப்பவர்கள் 2-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்’’ என டிஜிபி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 2 முதல் மறுஉத்தரவு வரும் வரை போலீஸாருக்கு விடுப்பு கிடையாது
ஜோதிட நாள்காட்டி 30.04.2026 | சித்திரை 17 - வியாழக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in