திருப்பத்தூரில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் தோற்ற அமைச்சர் பெரிய கருப்பன்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் பெரிய கருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இந்த தொகுதியில், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பத்தூர் தொகுதியில், திமுக சார்பில் அமைச்சர் பெரிய கருப்பன், பாஜக சார்பில் திருமாறன், தவெக சார்பில் சீனிவாச சேதுபதி, நாம் தமிழ் கட்சி சார்பில் ரம்யா மோகன், சசிகலா கட்சி சார்பில் உமாதேவி ஆகியோர் போட்டியிட்டனர். மேலும், 10 சுயேட்சைகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தவெக - திமுக இடையே நீண்ட இழுபறி நிலவி வந்தது. இறுதியில், சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர், அமைச்சர் பெரிய கருப்பனைவிட ஒரு வாக்கு மட்டுமே அதிகம் பெற்றார். பெரிய கருப்பன் 83,374 வாக்குகள் பெற்ற நிலையில், சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மூன்றாவதாக வந்த திருமாறன் 29,054 வாக்குகளையும், ரம்யா மோகன் 15,291 வாக்குகளையும், உமாதேவி 611 வாக்குகளையும் பெற்றனர்.

கடந்த 2006 முதல் தொடர்ந்து நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுகவின் வலுவான தொகுதியான இங்கு, இம்முறை தவெக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்: ஆளுநருக்கு கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in