“இபிஎஸ் வாக்குறுதி அளித்தால் அது செயலில் நடக்கும்” - அதிமுக திட்டவட்டம்!

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: நான்கரை ஆண்டுகள் அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துள்ளது திமுக அரசு. இபிஎஸ் ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது திமுக-வினருக்கே தெரியும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான்கரை ஆண்டுகள் அஇஅதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வருவதை மட்டுமே ஒரே வேலையாக வைத்துவிட்டு, இப்போது "காப்பி அடிக்கிறாங்க மிஸ்" என்று அஇஅதிமுக-வைப் பார்த்து சிறுபிள்ளைத்தனமாக திமுக அமைச்சர்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

எது ஒரிஜினல்? எது காப்பி?. அம்மா மருந்தகம் ஒரிஜினல்- முதல்வர் மருந்தகம் காப்பி. அம்மா மினி கிளினிக் ஒரிஜினல்- மக்களைத் தேடி மருத்துவம் காப்பி. தாலிக்கு தங்கம் ஒரிஜினல்- அதை உல்டா செய்தது தானே புதுமைப் பெண் திட்டம். இப்படி அடுக்கிக் கொண்டே போனால், திமுக அரசு செய்ததாக சொல்வது எல்லாமே, அஇஅதிமுக திட்டங்களின் காப்பி தான்!

மக்கள் நலத் திட்டங்களுக்கு எப்போதுமே சொந்தக்காரங்க நாங்க தான். ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டம் போட்டு திருடும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்.

மகளிருக்கு நேரடியாக நன்மைகள் சேர வேண்டும், அதுவும் பணமாக சேரவேண்டும் என்பதற்காகத் தான் தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது அஇஅதிமுக அரசு. அதன் அடுத்த கட்டமாகத்தான் 2021 தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 1500/- என அறிவித்தோம்.

எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய "டூப்" முதல்வர் ஸ்டாலினின் அரசு, வேறென்ன செய்து கிழித்தது. திமுக அரசின் மாதம் ஆயிரம் ரூபாயே, எடப்பாடியார் அவர்களின் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு, 28 மாதம் லேட்டா தானே ஸ்டாலின் அரசு கொடுத்தது. அதையும் இன்று வரை, சொன்னபடி அனைத்து மகளிருக்கும் கொடுக்கிறதா? தகுதி எனக் கூறி தமிழக மகளிரை இழிவு படுத்திய அரசை பெண்கள் மறந்துவிடுவார்களா?.

அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் இந்த அமைச்சர்கள் யாரென்று பார்த்தால், ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி. வாய்ப்பு ஒன்று வந்தால், தான் கட்டியிருக்கும் வேட்டியை கழற்றி விட்டு, வேறொரு வேட்டிக்கு தாவி, வானத்தைப் பார்த்து துப்பிக் கொள்ளக் கூட தயங்காத இந்த ரகுபதி எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி பேசலாமா?

இன்னொருவர் டி.ஆர்.பி. ராஜா. பாக்ஸ்கான் துணை கம்பெனி என்று சட்டமன்றத்திலேயே கம்பி கட்டும் கதையெல்லாம் உருட்டியவர் தானே இவர்? "ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தான்டா வளர்ச்சி..." என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இபிஎஸ் ஒரு வாக்குறுதி அளித்தால், அது செயலில் நடக்கும் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்பது திமுக-வினருக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயிற்றெச்சல். நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே. இன்னும் 2 மாசம் தான்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
“4 லட்சம் ஆசிரியர்களை நட்டாற்றில் விடக்கூடாது” - தேர்வு அட்டவணையை உடனே வெளியிட பாமக வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in