“நான் திமுகவை விமர்சிக்க தயாராக இல்லை” - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

Updated on
1 min read

சிவகங்கை: நான் திமுகவை விமர்சிக்க தயாராக இல்லை என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தி கோயில் நிதி மாயமானது ஆச்சரியம் அளிக்கிறது. அதை மூடி மறைக்கின்றனர். இந்த மோசடியில் சம்பந்தப்பட்டோர் அனைவரும் உத்தரப் பிரதேச அரசுடன் தொடர்புடையவர்கள். மோசடி வெளிப்படை தன்மை இல்லாமல், அமைப்பு மூலம் நடந்துள்ளது. அதனால், சிபிஐ விசாரணை கேட்டுள்ளோம்.

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் நிர்வாகத்தை மக்கள் கையில் கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜகவினர் கூறினர். அவர்கள் அயோத்தி கோயில் நிதி மோசடி குறித்து கருத்து கூறாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

இதன்மூலம் கோயில்களுக்கு அரசு கட்டுப்பாட்டு தேவை என்பது தெரிகிறது. மதத்தை வைத்து அரசியல் செய்யும் பாஜக முகத்திரை கிழிந்துள்ளது. அதிமுக கட்சி தலைமை நம்பிக்கை இல்லாமல் வெளியேறி வருகின்றனர். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழக ஜனநாயகத்துக்கு அந்த கட்சி தொடர்ந்து இருக்க வேண்டும். சிலர் அதிலிருந்து வெளியேறுவது வருத்தமளிக்கிறது.

திமுகவுக்கு காங்கிரஸ் எந்த துரோகமும் செய்யவில்லை. திமுகவுக்கு எங்கள் வாக்குகளும், காங்கிரஸூக்கு அவர்களது வாக்குகளும் கிடைத்துள்ளன. நாங்கள் திமுகவுடன் இருந்திருந்தாலும், அவர்களால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. நான் திமுக விமர்சிக்க தயாராக இல்லை. கடந்த 2 மக்களவைத் தேர்தல்களில் நான் திமுக கூட்டணி வாக்குகளால் தான் வெற்றி பெற்றேன்.

போலீஸாரால் குற்ற நிகழ்வுகளை தடுக்க முடியாது. தெரிந்த நபர்களால் தான் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. குற்றச் சம்பவத்துக்கு பிறகு போலீஸார் தண்டனை பெற்று தரலாம். ஆண்கள், பெண்களை மதிக்க வேண்டும். கல்வி, சமுதாய மாற்றம் மூலம் தான் பாலியல் குற்றங்களை குறைக்க முடியும். போலீஸாரால் தடுக்க முடியாது.

குறுகிய காலத்திலேயே தவெக அரசை விமர்சிக்க முடியாது. ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்கள் நியமனத்தில் தவறு நடந்திருந்தால் விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் பரிந்துரை செய்த எந்த வழக்கறிஞர்களையும் நியமித்ததாக தெரியவில்லை.

மாணிக்கம் தாகூர் தான் 3 ஆண்டுகளுக்கு மாநிலத் தலைவராக இருப்பார், அவருக்கு வாழ்த்துகள். சிவகங்கையை மையமாக வைத்து பல கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்த உள்ளேன். அரசு பள்ளிகளில் கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் நிதி மூலம் தரத்தை உயர்த்தலாம். எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதை நான் ஏற்கவில்லை. அது தொகுதி மக்களுக்கு செய்யும் துரோகம் தான்.

தவெக எம்எல்ஏக்கள் வெளியே போக மாட்டார்கள். அப்படியே சென்றாலும், வேறொரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. அதனால், விஜய் நம்பிக்கையாக தன்னிடம் இருக்கிற எம்எல்ஏக்கள், ஆதரவளித்த கட்சிகளை கொண்டே 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>கார்த்தி சிதம்பரம்</p></div>
“ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா?” - சீமான் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in