கோயிலில் கொடிமரம் அமைக்க முன்அனுமதி அவசியம்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அறநிலையத் துறை

ஆகம விதிகளின்படியே பிரதிஷ்டை செய்ய வேண்டும்
கோயிலில் கொடிமரம் அமைக்க முன்அனுமதி அவசியம்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அறநிலையத் துறை
Updated on
1 min read

சென்னை: கோ​யில்​களில் கொடிமரம் பிர​திஷ்டை செய்ய ஆணை​யரிடம் 15 நாட்​களுக்கு முன்பு அனு​மதிபெற வேண்​டும். முற்​றி​லும் ஆகம விதி​களின்​படியே கொடிமரம் அமைக்​கப்பட வேண்​டும் என்​பது உட்பட பல்​வேறு வழி​காட்டு நெறி​முறை​களை இந்து சமய அறநிலை​யத் துறை வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் டி.ஜி.​வினய் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: கோயில்​களில் பழு​தான பழைய கொடிமரத்தை அகற்​றி​விட்டு புதிய கொடிமரம் அமைக்​கவோ, புதி​தாக கட்​டப்​பட்ட கோயில்​களில் கொடிமரம் நிறு​வவோ ஆணை​யரின் முன்​அனு​மதி பெறு​வது அவசியமாகும். பட்​டியல் சார்ந்த மற்​றும் பட்​டியல் சாராத அனைத்து கோயில்​களுக்​கும் இது பொருந்​தும்.

புதிய கொடிமரம் பிர​திஷ்டை செய்​யப்​படு​வதற்கு குறைந்​த​பட்​சம் 15 நாட்​களுக்கு முன்​பாக ஆணை​யரின் அனு​ம​திக்கு விண்​ணப்​பிக்க வேண்​டும். இதனுடன் அந்​தந்த கோயில் செயல் அலு​வலர் அல்​லது அறங்​காவலர்​களின் தீர்​மான நகல், மண்டல ஸ்த​ப​தி​யின் கருத்​துரு, வரைபடக் குழு​வின் பரிந்​துரை, கோயில் அர்ச்​சகரின் கடிதம், முகூர்த்​தப் பத்​திரி​கை, புதிய கொடிமரத்​தின் வண்​ணப் புகைப்​படம், பழைய கொடிமரம் அகற்​றப்​பட்​டதற்​கான ஆணை​யர் உத்​தரவு நகல் ஆகிய​வற்றை இணைக்க வேண்​டும்.

உபய​தா​ரர்​கள் மூலம் கொடி மரம் வழங்​கப்​பட்​டால், அவர்​களது சம்​மதக் கடிதம் மற்​றும் நிதி ஆதா​ரத்​துக்​கான சான்​றுகளை இணைக்க வேண்​டும். புதிய கொடிமரத்​துக்கு தங்​கம், வெள்​ளி, செப்​புக் கவசங்​கள் பொருத்த வேண்​டும் என்​றால் அதற்கு தனி​யாக அனு​மதி பெறவேண்​டும். இது​வரை கொடிமரம் இல்​லாமல், முதல்​முறை​யாக ஒரு கோயி​லில் கொடிமரம் நிறு​வப்​படு​கிறது என்​றால், மண்​டல,மாநில அளவி​லான நிபுணர் குழு​வின் தீர்​மானம் மற்​றும் ஆகம வல்​லுநர்​களின் (சி​வாச்​சா​ரி​யார்/ பட்​டாச்​சா​ரி​யார்) கருத்​துரு​வைப் பெறு​வது அவசி​யம்.

கொடிமரம் அமைக்​கும் பணி முற்​றி​லும் ஆகம விதி​களின்​படியே நடை​பெற வேண்​டும். மண்டல உதவி அல்​லது துணை ஆணை​யர் முன்​னிலை​யிலும், மண்டல ஸ்த​பதி மற்​றும் பொறி​யாளர்​களின் ஆலோ​சனைப்​படி​யும் இப்​பணி​கள் நடை​பெற வேண்​டும். பக்​தர்​களுக்கு இடையூறு ஏற்​ப​டா​மலும், பணி​யாளர்​களின் பாது​காப்பை உறுதி செய்​தும் கொடிமரம் அமைக்​கும் பணி​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும்.

பழைய கொடிமரத்​தின் அடி​யில் விலை உயர்ந்த பொருட்​கள்ஏதேனும் கண்​டெடுக்​கப்​பட்​டால், அதுபற்​றிய விவரங்​கள் முறை​யாக பதிவு செய்​யப்​பட்​டு, புதியகொடிமரத்​தின் அடி​யில் அவற்றை மீண்​டும் வைக்க வேண்டும். பணி​கள் தொடக்​கம் முதல் நிறைவு வரை முழு​மை​யாக வீடியோ, புகைப்​படம் எடுக்​கப்​பட்​டு, கோயில் பதிவேட்​டில் நிரந்​தர​மாக பாது​காக்​கப்பட வேண்​டும்.பணி​கள் முடிந்​ததும் அதுகுறித்த விரி​வான அறிக்​கையை வீடியோ ஆதா​ரத்து​டன் ஆணையருக்கு சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

கோயிலில் கொடிமரம் அமைக்க முன்அனுமதி அவசியம்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அறநிலையத் துறை
“சோனம் வாங்சுக்கின் தியாகம் வரலாற்றில் நிலைத்து நிற்கும்” - சிஜேபி புகழாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in