கூட்டுறவுச் சங்கங்களில் வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடியாக உயர்வு

கூட்டுறவுச் சங்கங்களில் வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடியாக உயர்வு
Updated on: 
1 min read

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நகரக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்படும் வீட்டு கடன்கள் மற்றும் அடமான கடன்களுக்கான உச்சவரம்பு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.100 கோடிக்குக் குறைவாக வைப்புத்தொகை கொண்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.60 லட்சம் வரை வீட்டுக்கடன் வழங்கப்படும்.

ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத்தொகை கொண்ட வங்கிகளில் தனிநபர் அதிகபட்சமாக ரூ.1.40 கோடி வரை கடன் பெறலாம்.

அதேபோல், ரூ.100 கோடிக்கு குறைவான வைப்புத்தொகை உள்ள நகரக் கூட்டுறவு கடன் சங்கங்களில் தனிநபர் ரூ.60 லட்சம் வரையும், ரூ.100 கோடிக்கு மேல் வைப்புத் தொகை உள்ள சங்கங்களில் தனிநபர் ரூ.1 கோடி வரையும் கடன் பெற முடியும்.

இதுதவிர கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச கால அவகாசம் தற்போது 20 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களில் வீட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.1.40 கோடியாக உயர்வு
சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் மனு: நாளை விசாரணைக்கு வருகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in