9 கட்ட தேர்தலில் இருந்து ஒரே கட்டமாக மாறிய வரலாறு: 375 லிருந்து 234 ஆக குறைந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை

9 கட்ட தேர்தலில் இருந்து ஒரே கட்டமாக மாறிய வரலாறு: 375 லிருந்து 234 ஆக குறைந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் முதல் சட்டப்​பேரவை தேர்தல் 1952-ம் ஆண்டு ஜன.2, 5, 8, 9, 11, 12, 16, 21, 25 ஆகிய 9 நாட்கள் நடைபெற்​றது. அப்போது ஆந்தி​ராவை உள்ளடக்கிய தமிழகம், சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்​தது.

அந்த பொதுத்​தேர்​தலில் வாக்​களிக்​கும் வயது 21 ஆக இருந்த நிலை​யில், 2.75 கோடி பேர் சென்னை மாகாணத்​தில் வாக்​களிக்​கும் உரிமை​யைப் பெற்றிருந்​தனர்.

சட்டப்​பேரவை உறுப்​பினர்​களின் மொத்த எண்ணிக்கை 375 ஆக இருந்த நிலை​யில், உறுப்​பினர்களை 309 தொகு​தி​களில் இருந்து தேர்வு செய்​யும் நிலை இருந்​தது. இதில், ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்கள் இருந்த 66 தொகு​தி​களில் இரட்டை வாக்​குரிமை அமலில் இருந்​தது.

அதேபோல், பட்டியல் சமூகத்​தினருக்கு 62 தொகு​தி​கள், பழங்குடி​யினருக்கு 4 தொகு​திகள் ஒதுக்​கப்​பட்​டிருந்தன. இந்த 66 தொகு​தி​களில் ஒவ்வொன்​றி​லும் பொதுப்​பட்​டியல், தனிப்​பட்​டியல் என இரண்டு வேட்​பாளர் பட்டியல்கள் இருந்தன.

இந்த இரண்​டிலும் தனித்​தனியாக வாக்​களிக்க வேண்​டும். இந்த முறை​யில், தனி உறுப்பினர்கள் (எஸ்சி, எஸ்டி), பொது உறுப்​பினர்கள் என இரு உறுப்​பினர்கள் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இரட்டை உறுப்​பினர்கள் தேர்வு முறை 1952, 1957 தேர்​தல்​களில் இருந்​தது. 1962-ம் ஆண்டில் இந்த முறை நீக்​கப்​பட்டு, தனித்​தொகுதி முறை அமலுக்கு வந்தது.

1957-ம் ஆண்டு மார்ச் 31-ல் நடைபெற்ற சட்டப்​பேரவை தேர்​தலில் ஆந்திரா தனி மாநிலமாக பிரிந்து சென்​ற​தால், சென்னை மாகாணத்​தின் சட்டப்​பேரவை தொகு​தி​களின் எண்ணிக்கை 205 ஆக குறைந்​தது.

அதன்​பிறகு, 1962-ம் ஆண்டு பிப்​.21-ல் நடைபெற்ற சட்டப்​பேர​வைத் தேர்​தலில் தொகு​தி​களின் எண்ணிக்கை ஒன்று அதிகரித்து 206 ஆனது. 1967-ம் ஆண்டில் பிப்.5, 21 என இரண்டு கட்டங்​களாக தேர்தல் நடைபெற்​றது. இந்த தேர்​தலில் தொகு​தி​களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரிக்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து 1971-ம் ஆண்டு மார்ச் 1, 7 ஆகிய தேதி​களி​லும், 1977-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி​யும் சட்டப்​பேரவை தேர்தல் நடந்​தது. 1980-ம் ஆண்டு ஆட்சி கலைக்​கப்​பட்​ட​தால், அதே ஆண்டு மே 28-ம் தேதி சட்டப்​பேரவை தேர்தல் நடைபெற்​றது.

1984-ல் டிச.24-ம் தேதி​யும், 1989-ல் ஜன.21-ம் தேதி​யும் தேர்தல் நடந்​தது. இந்த தேர்​தலில் வாக்​களிக்​கும் வயது 18 ஆகக் குறைக்​கப்​பட்​டது. 1991-ம் ஆண்டு ஜன.30-ம் தேதி ஆட்சி கலைக்​கப்​பட்​ட​தால், அதே ஆண்டு சட்டப்​பேர​வைத் தேர்தல் நடைபெற்​றது.

அதன் பிறகு, 1996 ஜூன் 24-ம் தேதி​யும், 2001-ம் ஆண்டு மே 10-ம் தேதி​யும், 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி​யும், 2011-ம் ஆண்டு ஏப்.13-ம் தேதி​யும், 2016-ம் ஆண்டு மே 16-ம் தேதி​யும், 2021-ம் ஆண்டு ஏப்.6-ம் தேதி​யும் சட்டப்​பேரவை தேர்​தல்கள் அடுத்​தடுத்து நடைபெற்றன.

இந்நிலை​யில், தமிழக சட்டப்​பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் 4,023 வேட்​பாளர்கள் களத்​தில் உள்ளனர். இந்த தேர்​தலில் 5.73 கோடி வாக்​காளர்கள் வாக்​களிக்க உள்ளனர்.

9 கட்ட தேர்தலில் இருந்து ஒரே கட்டமாக மாறிய வரலாறு: 375 லிருந்து 234 ஆக குறைந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை
அதிக வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ள அமைவிடத்தில் பொதுமக்கள் எளிதில் செல்ல ‘கலர் கோடு’ - மாவட்ட தேர்தல் அலுவலகம் புது முயற்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in