

திருப்பரங்குன்றம் தீபத்தூண் | கோப்புப் படம்
கோவை: இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டிய சூழல் உருவானது.
தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டி, வரும் 18-ம் தேதி திருப்பரங்குன்றத்தில் ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் முருக பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.