காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

‘‘மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதால் திமுக வன்முறையில் ஈடுபடுகிறது’’ - இந்து முன்னணி

Published on

சென்னை: ‘‘இந்து விரோத திமுகவின் செயலுக்கு முடிவுரை எழுதும் நேரம் நெருங்கிவிட்டது. திமுகவின் வன்முறை செயலுக்கு காவல்துறை துணை போவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது’’ என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று நடந்த விவாத நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜெ. சூர்யா மீது திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை பத்திரிகையாளர் என கூறிக்கொள்ளும் திமுக ஆதரவாளர் செந்தில் பகிரங்கமாக சதி செய்து பேசும் வீடியோ சமூக ஊடகத்தில் வெளிவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் அந்தப் பகுதி கவுன்சிலர் மற்றும் கொலை குற்றவாளிகள் சிலரை போலீஸ் ஈடுபடுத்தியதாகத் தெரிகிறது. சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகில் வன்முறை நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த ரடிகள், அங்கு இருந்த தனியார் பாதுகாவலர்களை மிரட்டுகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் செல்போனில் படம் எடுத்து விடக்கூடாது என்று மின் விளக்குகள் அனைத்தையும் அணைக்க வைத்துள்ளனர்.

இன்னும் சில மாதங்களே ஆட்சி இருக்கையில் திமுக அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறது. மக்களின் நம்பிக்கையை இழந்த அரசியல் கட்சியின் கடைசி ஆயுதம் கலவரம். இதற்கு காவல்துறை, அரசு அதிகாரிகள் துணை நிற்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றிட, நீதிமன்றம் தந்த தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொள்ள அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தைரியம் வந்தது எப்படி? காரணம் ஆளும்கட்சி தரும் தைரியம் தான்.

திருப்பூர் பெருமாநல்லூர் அருகில் இருக்கும் கல்லாங்குன்றம் முருகன் கோயிலை சட்டவிரோதமாக அரசு அதிகாரிகள் இடித்தபோது நடந்த சம்பவங்களும் திமுக அரசின் கீழ்த்தரமான செயலையே உறுதிப்படுத்துகிறது. அரசும், அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதை மக்கள் கவனித்துக் கொண்டு வருகிறார்கள்.

திமுக ஆட்சி என்றாலே வன்முறை, சட்டவிரோதம், கலவரம், பயங்கரவாதம், போதை ஆகியவை தலைவிரித்தாடும் என்றே மக்களும் கூறுகிறார்கள். மக்களின் மறதியை பயன்படுத்தியும், மக்களின் ஆசையைத் தூண்டியும் வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன், மீண்டும் அராஜகத்தில் ஈடுபடுவது என்பது தான் திமுகவின் வரலாறு.

அதர்மம் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும் அதற்கு அழிவு தான் முடிவு. இந்து விரோத திமுகவின் செயலுக்கு முடிவுரை எழுதும் நேரம் நெருங்கிவிட்டது.

ஊடகத்தின் வாயை மூடலாம், மக்களின் எதிர்ப்பிற்கு திரை போட்டு மூட முடியாது என்பதை தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் உணர வேண்டும். இந்த திட்டமிட்ட வன்முறைச் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும் அவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்த சீப்பு செந்தில் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்</p></div>
தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in