கடவுள் நம்பிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் தாராபுரம் உரை - இந்து முன்னணி பாராட்டு

கடவுள் நம்பிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் தாராபுரம் உரை - இந்து முன்னணி பாராட்டு
Updated on: 
1 min read

சென்னை: “தனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பதை வெளிப்படையாகப் பேசியதோடு, தாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல என்று பேசிய முதல்வர் விஜய்க்கு பாராட்டுக்கள்,” என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்​தேர்​தல் அக்​.6-ம் தேதி நடை​பெற உள்​ளது. இங்கு தவெக வேட்​பாளர் சத்யபாமாவை ஆதரித்து நேற்று நடை​பெற்ற பிரம்​மாண்​டப் பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் பேசினார். அப்போது, “மக்களுக்காக நாம் இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறோம். அவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக நாம் வந்திருக்கிறோம். மக்கள் நம் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக நாம் அதைக் காப்பாற்றுவோம்.

நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக, எம்மதமும் சம்மதம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், எம்மதமும் நம் மதம் என்று சொல்லித்தான் வந்திருக்கிறோம். கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்பதை சொல்லிவிட்டுத்தான் நாம் அரசியலுக்கு வந்திருக்கிறோம். யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல என்பதைச் சொல்லிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.

உங்களுடைய அந்த நம்பிக்கையை நாம் மதிக்கிறோம். மற்றவர்கள் மதிக்கிறார்கள், மதிக்கவில்லை என்பது பற்றி நமக்கு கவலை இல்லை. நாம் மதிக்கிறோம். அதனால்தான் நமது கொள்கை, மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை என இருக்கிறது. நமது கூட்டணியின் பெயர்கூட மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிதான்.

கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்லுவோம், கிறிஸ்துமஸ்க்கும் வாழ்த்து சொல்லுவோம், பக்ரீத்துக்கும் வாழ்த்து சொல்லுவோம். நமக்கு எல்லோரும் ஒன்றுதான், எல்லோருமே சமம்தான். வெளியே ஒன்றும் வீட்டுக்குள் ஒன்றுமாக வேஷம் போட்டுக்கொண்டு இருக்கும் திமுகபோல நாம் இருக்க மாட்டோம்.” என விஜய் பேசி இருந்தார்.

முதல்வர் விஜய்யின் இந்தப் பேச்சுக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. “கடவுள் நம்பிக்கை இருக்கு! யாரோட கடவுள் நம்பிக்கைக்கும் நாம் எதிரானவர்கள் இல்லை!! மற்றவர்கள் மாதிரி வெளிவேஷம் போடுவதில்லை!!! தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஓபன் டாக்! முதல்வருக்கு பாராட்டுகள்..!!” என இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடவுள் நம்பிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் தாராபுரம் உரை - இந்து முன்னணி பாராட்டு
“அரசியலுக்காக ஒரு பெண்ணின் கண்ணீரை தவறாகச் சித்தரிப்பதா?” - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in