திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்றிட வேண்டி கும்பகோணம் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் வழிபாடு!

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்றிட வேண்டி கும்பகோணம் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் வழிபாடு!
Updated on
1 min read

கும்பகோணம்: திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்ற வேண்டி, கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மாநில துணைத் தலைவர் பாலா தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, அடிமை சின்னம் நீக்கப்பட்டு ராமரின் பூமி என்று நிருபித்த நாள் மற்றும் இந்துக்களின் எழுச்சி நாளான இன்று (டிச.6), அயோத்தியை மீட்டது போல், காசியில் விஸ்வநாதர் கோயில் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல், மதுராவையும் மீட்க வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பிரசாத தட்டுகளுடன் கோயில் பிரகாரத்தை சுற்றி அகல் தீபம் கையில் ஏந்தியபடி வலம் வந்து, மூலவர் சந்நதி முன் வைத்து, ராமனிடம் கோரிக்கை விடுத்து வழிபட்டனர்.

முன்னதாக அவர்கள், இந்துக்களின் மதிப்பை உணர்வுகளை மதிக்க வேண்டும், மத மோதலை தூண்டுக்கூடாது, சட்டத்தின் படி ஆட்சியை அல்லது திராவிடல் மாடல் ஆட்சி என்று முழக்கமிட்டு வலம் வந்தனர்.

தொடர்ந்து, மாநில துணைத் தலைவர் பாலா மற்றும் நிர்வாகிகள், அரசு போக்குவரத்து கழகம் முன் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்தநிலையில் மாநிலப் பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்க போலீஸார் அனுமதி மறுத்தனர். மீறி மாலை அணிவிக்கச் சென்றால் கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் உச்சியில் தீபம் ஏற்றிட வேண்டி கும்பகோணம் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் வழிபாடு!
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைத்தது சக்கர வியூகம்!” - அமைச்சர் சேகர்பாபு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in