திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து மக்கள் கட்சி வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தது ஐகோர்ட்

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

திருப்பரங்குன்றம் தீபத்தூண்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி நவ. 22-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வலியுறுத்தி நவ. 22 ஆம் தேதி திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையம் அருகில் கவனம் ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டோம்.

இதற்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை. எனவே, நவ. 22 ம் தேதி திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் அமைந்துள்ள மயில் மண்டபத்தில் கந்த சஷ்டி கவச பாராயணம் நடத்தவும், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்க கோரியும், திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், அந்த இடத்தில் அனுமதி வழங்க முடியாது. மாற்று இடத்தில் வேண்டுமானால் அனுமதிக்கலாம். தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் தீபத்தூண்</p></div>
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

X