கோப்புப் படம்

கோப்புப் படம்

கிட்னி திருட்டு வழக்கில் கைதான இடைத்தரகரின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Published on

சென்னை: சட்​ட​விரோத கிட்னி திருட்டு வழக்​கில் கைதான இடைத்​தரகர் மோக​னின் ஜாமீன் மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​து உத்தரவிட்டுள்​ளது.

நாமக்​கல் மாவட்​டம் குமார​பாளை​யம் மற்​றும் பள்​ளி​பாளையம் பகு​தி​களில் உள்ள ஏழை, எளிய விசைத்​தறி கூலித் தொழிலா​ளர்களை குறி​வைத்து சட்​ட​விரோத​மாக கிட்னி திருட்​டில் ஈடு​பட்ட சம்​பவம் அதிர்​வலையை ஏற்​படுத்​தி​யது. இதுதொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்த போலீஸார் இடைத்​தரகர்​களாக செயல்​பட்ட ஆனந்த் மற்​றும் மோகனை கைது செய்​தனர்.

இந்த வழக்​கில் தனக்கு ஜாமீன் கோரி மோகன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். அதில், சட்​ட​விரோத கிட்னி திருட்டு சம்​பவத்​தில் தனக்கு தொடர்பு இல்லை என்​றும், தனது முதுமை மற்​றும் உடல்​நிலையை கருத்​தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரி​யிருந்​தார். இந்த மனு நீதிபதி கே.​ராஜசேகர் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது காவல்​துறை தரப்​பில், நாமக்​கல் மாவட்​டத்​தில் ஏழைக் கூலித்​தொழிலா​ளர்​களை குறி​வைத்து நடத்​தப்​பட்டஇந்தக் கிட்னி திருட்டு சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை அரசு ஒரு​போதும் மன்​னிக்​காது. வழக்கு விசா​ரணை தொடக்​கநிலையில் இருப்​ப​தால் இடைத்​தரக​ராக செயல்​பட்ட மனு​தா​ரருக்கு ஜாமீன் வழங்​கக் கூடாது என ஆட்​சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிப​தி, ஜாமீன் கோரிய மோக​னின் மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in