தேவநாதன் யாதவ் மனு தள்ளுபடி: அக்.31-க்குள் சரணடைய ஐகோர்ட் உத்தரவு

தேவநாதன் யாதவ் | கோப்புப் படம் 

தேவநாதன் யாதவ் | கோப்புப் படம் 

Updated on: 
1 min read

சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தி மயிலாப்பூர் பெனிபிட் பண்ட் இயக்குநர் தேவநாதன் யாதவுக்கு மருத்துவ சிகிச்சை பெற வழங்கிய கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் சரணடையும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற 8 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேவநாதன் தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி சுந்தர் மோகன் மற்றும் ஜி கே.முத்துக்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேவநாதன் தரப்பில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டது.

முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி, இந்த வழக்கு விசாரணைக் உகந்ததல்ல என்றும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

சரணடைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க எந்த காரணமும் இல்லை. வரும் 31-ஆம் தேதிக்குள் சிறையில் சரணடைய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

அன்றைய தினம் அரசின் மருத்துவ குழு தேவநாதனின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>தேவநாதன் யாதவ் | கோப்புப் படம்&nbsp;</p></div>
கடன் தொல்லையால் 3 மாத பெண் குழந்தையை சாலையில் விட்டுச் சென்ற பெண் - போலீஸ் விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in