தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

மதுரை: தமிழகத்தில் அதிக டாஸ்மாக் கடைகள் இருப்பதால், புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி நவக்கினத்துப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருச்சி நல்லம்பிள்ளை கிராமம் நவகினத்துப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு கடை திறந்தால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். எனவே கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், தமிழகத்தில் ஏற்கெனவே அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதனால் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டியது இல்லை. பொதுநலன் கருதி தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மேகேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது: மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்

X