முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு? - விளக்கமான பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை எவ்வளவு? - விளக்கமான பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித்​தொகை எவ்​வளவு என்பது குறித்து வரு​மான வரித்​துறை விளக்​கான பதில்​மனுவை வரும் ஜன.12-க்​குள் தாக்​கல் செய்ய வரு​மான வரித்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா பாக்​கி​யாக வைத்​துள்ள ரூ.36.56 கோடி வரு​மான வரியை 7 நாட்​களுக்​குள் செலுத்த வேண்​டுமென அவரது சட்​டப்​பூர்வ வாரிசுகளான ஜெ.தீபா மற்​றும் ஜெ.தீபக் ஆகியோருக்கு வரு​மான வரித்​துறை கடந்த ஜூலை 23 அன்று நோட்​டீஸ் அனுப்​பியது.

இதை எதிர்த்து ஜெ.தீபா உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்து அந்த நோட்​டீஸுக்கு தடை உத்​தரவு பெற்​றார். அதையடுத்து அந்த நோட்​டீஸை திரும்​பப் பெற்ற வரு​மான வரித்​துறை ரூ. 13.69 கோடியை செலுத்​தும்​படி புதி​தாக நோட்​டீஸ் அனுப்​பியது.

உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி இந்த வழக்​கில் ஜெ.தீபக்​கும் இணைந்​தார். கடந்த முறை இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த போது நிலு​வைத் தொகை​யில் தனது பங்​குத்​தொகையை தவணை முறை​யில் செலுத்தி வரு​வ​தாக ஜெ.தீபக் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிபதி சி.சர​வணன் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஜெ.தீபா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்​.சத்​தி​யகு​மார், “ஏற்​கெனவே ஜெயலலிதா வரு​மான வரி பாக்கி தொடர்​பான வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன.

முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி எனக்​கூறிய வரு​மான வரித்​துறை, அதன்​பிறகு ரூ.36 கோடி கட்ட வேண்​டும் எனக்​கூறியது. தற்​போது ரூ.13.69 கோடி எனக் கூறுகிறது. வரு​மான வரித்​துறை​யின் இந்த கணக்​கீடு முற்​றி​லும் தவறானது என்​பது தான் எங்​கள் தரப்பு வாதம். நிலுவை வரி தொடர்​பாக தெளி​வான எந்த விளக்​கத்​தை​யும் வரு​மான வரித்​துறை தெரிவிக்​க​வில்​லை” என்​றார்.

அப்​போது ஜெ.தீபக் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஏ.எல்​.சுதர்​சனம், “எங்​களது பங்​களிப்​புத் தொகையை தவணை முறை​யில் செலுத்தி வரு​கிறோம்” என்​றார். வரு​மான வரித்​துறை தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஜெ.பிர​தாப், ``தற்​போது வரு​மான வரி பாக்​கி​யாக ரூ.13.69 கோடி உள்​ளது. இதில் தனது பங்​குத் தொகையை தீபக் செலுத்தி வரு​வ​தால், தீபா செலுத்த மாட்​டேன், எனக்​கூற முடி​யாது” என்​றார்.

அதையடுத்து நீதிப​தி, ``மறைந்த முன்​னாள் முதல்​வ​ரான ஜெயலலிதா செலுத்த வேண்​டிய வரு​மான வரி பாக்​கித் தொகை எவ்​வளவு என்​பது குறித்து விளக்​க​மான பதில் மனுவை வரு​மான வரித்​துறை தாக்​கல் செய்ய வேண்​டும்'' என உத்​தர​விட்டு வி​சா​ரணை​யை வரும்​ ஜன. 12-க்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in