ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

Published on

சென்னை: போக்​கு​வரத்து ஆணை​யர் கிரண் குணராலா வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு: பொங்​கல் பண்​டிகை மற்​றும் தொடர் வார விடு​முறையை முன்​னிட்டு (ஜன.12 முதல் 18-ம் தேதி வரை) பொது​மக்​கள் வெளியூர் பயணம் மேற்​கொள்​வதைப் பயன்​படுத்தி தனி​யார் ஆம்னி பேருந்​துகள் அதி​கப்​படி​யான கட்​ட​ணம் வசூல் செய்​தால், அதனைத் தடுக்க தமிழகம் முழு​வதும் வட்​டாரப் போக்​கு​வரத்து அலு​வலர்​கள், மோட்​டார் வாகன ஆய்​வாளர்​கள் மற்​றும் போக்​கு​வரத்து சோதனைச்​சாவடி ஆய்​வாளர்​கள் ஆகியோரைக் கொண்டு சிறப்​புக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிப்​ப​து தொடர்பாக, பொதுமக்கள் போக்​கு​வரத்து மற்​றும் சாலைபாது​காப்பு ஆணை​யரகம், சென்னை 1800 425 6151, இணைப் போக்​கு​வரத்து ஆணை​யரகங்​கள் - சென்னை (வடக்​கு) 99442 53404, சென்னை (தெற்​கு) 97905 50052, மதுரை 90953 66394, கோவை 91235 93971, துணைப் போக்​கு​வரத்து ஆணை​யரகங்​கள் - விழுப்​புரம் 96773 98825, வேலூர் 98400 23011, சேலம் 78456 36423, ஈரோடு 80569 40040, திருச்சி 90660 32343, விருதுநகர் 90257 23800, திருநெல்​வேலி 96981 18011, தஞ்​சாவூர் 95850 20865 ஆகிய எண்​களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்​கலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு
‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 18-வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,000 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in