முரசு புயலால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 435 கன அடியாக உயர்வு

முரசு புயலால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 435 கன அடியாக உயர்வு
Updated on: 
1 min read

திரு​வள்​ளூர்​/மது​ராந்​தகம்: தொடர் மழை காரண​மாக புழல் ஏரிக்கு நீர்​வரத்து விநாடிக்கு 435 கன அடி​யாக அதி​கரித்​துள்​ளது. பூண்​டி, செம்​பரம்​பாக்​கம், சோழ​வரம், கண்​ணன் கோட்​டை-தேர்​வாய் கண்​டிகை ஏரி​களுக்​கும் நீர்​வரத்து அதி​கரித்து வரு​கிறது.

முரசு புயல் காரண​மாக திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் தொடர் மழை பெய்து வரு​கிறது. இதனால் திரு​வள்​ளூர் மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் உள்ள சென்​னைக்கு குடிநீர் தரும் முக்​கிய ஏரி​களான பூண்​டி, புழல், சோழ​வரம், கண்​ணன் கோட்​டை-தேர்​வாய் கண்​டிகை மற்​றும் செம்​பரம்​பாக்​கம் ஏரி​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது.

நேற்று காலை நில​வரப்​படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 435 கன அடி நீர்​வரத்து உள்​ளது. ஆகவே 3,300 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட புழல் ஏரி​யின் நீர் இருப்பு 2,355 மில்​லியன் கன அடி​யாக உள்​ளது.

அதே​போல் செம்​பரம்​பாக்​கம் ஏரிக்கு விநாடிக்கு 197 கன அடி நீர்​வரத்து உள்​ளது. இதனால் இதன் மொத்த கொள்​ளள​வான 3,645 மில்​லியன் கன அடி​யில் 1,407 மில்​லியன் கன அடி நீர் உள்​ளது.

பூண்டி ஏரிக்கு 60 கன அடி நீர் வரு​கிறது. இதன் மொத்த கொள்​ளள​வான 3,231 மில்​லியன் கன அடி​யில் 581 மில்​லியன் கன அடி நீர் உள்​ளது. சோழ​வரம் ஏரிக்கு 55 கன அடிநீர் வரு​கிறது.

1,081 மில்​லியன்கன அடி கொள்​ளளவு கொண்ட இந்த ஏரி​யில் 148 மில்​லியன் கன அடி​யும், கண்​ணன் கோட்​டை-தேர்​வாய் கண்​டிகை ஏரிக்கு 20 கன அடி நீர் வரு​வ​தால், 500 மில்​லியன் கன அடி மொத்த கொள்​ளள​வில் 249 மில்​லியன் கன அடி​யும் நீர் இருப்பு உள்​ளது.

முரசு புயலால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 435 கன அடியாக உயர்வு
போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?

X