தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் விழுப்​புரம், கடலூர், மயி​லாடு​துறை, தேனி ஆகிய 4 மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் இன்று (மே 16) இடி​யுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் வி.ஆர்​.துரை நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்கு வங்​கக்​கடல் மற்​றும் அதனை ஒட்​டிய மத்​திய மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்​வுப்​பகு​தி, வெள்​ளிக்​கிழமை பகலில் அதே பகு​தி​களில் நில​வியது. இதன் காரண​மாக, விழுப்​புரம், கடலூர், மயி​லாடு​துறை, தேனி ஆகிய 4 மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் சனிக்​கிழமை (மே 16) இடி​யுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும். தென் தமிழகம் மற்​றும் கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

மே 17-ம் தேதி திண்​டுக்​கல், தேனி, கோயம்​புத்​தூர், நீல​கிரி ஆகிய 4 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று (மே 16) வானம் பொது​வாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி​யுடன் கூடிய மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

மே 19-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும். இது​போல அந்​த​மான் கடல் பகு​தி​கள், தெற்கு வங்​கக்​கடலின் அநேக பகு​தி​கள், மத்​திய கிழக்கு வங்​கக்​கடல் பகு​தி​கள் மற்​றும் அதனை ஒட்​டிய மத்​திய மேற்​கு, மத்​திய வங்​கக்​கடல் பகு​தி​களில் மே 19-ம் தேதி பலத்த சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in