நீலகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் நீல​கிரி, விழுப்​புரம் உள்​ளிட்ட 6 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: வட கர்​நாடகத்​தின் உள்​பகு​தியி​லிருந்து குமரிக்​கடல் பகு​தி​கள் வரை, தென் உள்​கர்​நாடகம், கேரளா மற்​றும் தமிழகம் வழி​யாக, சராசரி கடல் மட்​டத்​திலிருந்து 5.8 கி.மீ. உயரத்​தில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது.

இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (ஆக.3) நீல​கிரி, தேனி, திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம் மற்​றும் கடலூர் மாவட்​டங்​கள், கோவை மாவட்​டத்​தின் மலைப்​பகு​தி​கள் மற்​றும் புதுச்​சேரி பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் வட கடலோர தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும். இதர தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசான மழை பெய்​யக்​கூடும்.

4-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் வட கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் மித​மான மழை பெய்​யக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று மாலை அல்​லது இரவு நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in