வெள்ளப்பெருக்கில் சிக்கிய 9 தொழிலாளர்கள் மீட்பு: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் மழை கொட்டி தீர்த்தது

பல இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்தது
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தைச் சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தைச் சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.

Updated on:
2 min read

கடலூர்/புதுச்சேரி: கடலூர், விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி, புதுச்​சேரி​யில் நேற்று முன்​தினம் மாலை 5.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம் மழை பெய்​தது.

கடலூர்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து நேற்று மதியம் வரை பெய்தது. மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால் விளைநிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெய்வேலி - விருத்தாசலம் சாலை, குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் சாலை உட்பட பல இடங்கள் மழைநீரில் மூழ்கின.

நேற்று அதி​காலை 3 மணி​யளவில் திடீரென தொழுதூர் அணைக்​கட்​டுக்கு 30 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர்​வரத்து அதி​கரித்​தது. முன்​னறி​விப்​பின்றி அதிக நீர்​வரத்து இருந்​ததால் அதிர்ச்​சி​யடைந்த அதி​காரி​கள் வெள்​ளாற்​றில் அந்த நீரை திறந்​து​விட்​டதுடன், கரையோர கிராமங்​களுக்கு வரு​வாய்த்​துறை மற்​றும் ஊராட்சி நிர்​வாகங்​கள் மூலம் எச்​சரிக்கை விடுத்​தனர்.

பெரம்​பலூர் மாவட்​டம் வெள்ளாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது ஏறி நின்ற தொழிலாளர்கள்.

பெரம்​பலூர் மாவட்​டம் வெள்ளாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஆற்றுக்குள் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது ஏறி நின்ற தொழிலாளர்கள்.

பெரம்பலூர்: தொழுதூர் அணை​யில் இருந்து முன் அறி​விப்​பின்றி தண்​ணீர் திறக்​கப்​பட்​ட​தால், வெள்​ளாற்​றில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கில் 9 தொழிலா​ளர்​கள் சிக்கிக் கொண்டனர். பெரம்​பலூர் மாவட்​டம் குன்​னம் வட்​டம் லப்​பைக்​குடிக்​காட்டை அடுத்த வெள்​ளாற்​றில் உள்ள திடல் போன்ற பகுதி​யில், சேலம் மாவட்​டம் ஆத்​தூரைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழு​வினர் அண்​மையில் பொருட்​காட்சி அமைத்​திருந்​தனர். இந்​தப் பொருட்​காட்சி 3 நாட்​களுக்கு முன்பு நிறைவடைந்த​தால் பொருட்​களை அகற்​றும் பணி​யைத் தொழிலா​ளர்​கள் தொடங்​கினர்.

இதற்​கிடையே, தொழுதூர் அணை​யில் இருந்து வெள்​ளாற்​றில் முன்​னறி​விப்​பின்றி விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்​து​விடப்​பட்​டது. இதன் காரண​மாக, வெள்​ளாற்​றில் திடீரென வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​ட​தால், பொருட்​காட்​சித் திடலில் பணி​யில் இருந்த தொழிலா​ளர்​கள் 9 பேரும் ஆற்று வெள்​ளத்​தில் சிக்​கினர். இத​னால், தங்​களது உயிரை காப்​பாற்​றிக்​கொள்ள ஆற்​றுக்​குள் நிறுத்​தப்​பட்​டிருந்த மினி லாரி மற்​றும் வேன் மீது ஏறி நின்​றனர்.

தீயணைப்பு வீரர்​கள் அங்கு வந்து, கயிறு மூலம் 9 தொழிலா​ளர்​களை​யும் வெள்​ளத்​தில் இருந்து பத்​திர​மாக மீட்​டனர். அந்தப் பகுதியில் வெள்​ளப் பாதிப்​புள்ள பகுதி​களில் வசிக்​கும் மக்​களை பாது​காப்​பான இடங்​களுக்கு அழைத்​துச் சென்று, உணவு மற்​றும் அடிப்​படை வசதி​கள் செய்து கொடுக்​கும்​படி அதி​காரி​களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்​தர​விட்​டார்.

புதுச்​சேரி: புதுச்​சேரி​யில் 9.7 செ.மீ மழை பதிவாகியது. மழை கொட்டி தீர்த்​ததால் புதுச்​சேரி உப்​பனாறு வாய்க்​கால் உள்​ளிட்ட பிரதான வாய்க்​கால்​களில் வெள்​ளநீர் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. தாழ்​வான பகுதி​களில் மழைநீர் சூழ்ந்​துள்​ளது. பல இடங்​களில் வீடுகளில் மழைநீர் புகுந்​தது.

பல இடங்களில் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது. சுற்​றுலா பயணிகள் வெளியே செல்ல முடி​யாமல் விடுதி​களில் முடங்​கினர். மீனவர்​கள் நாளை (அக்.27) வரை கடலுக்​குச் செல்ல வேண்​டாம் என அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. கனமழையால் பொது​மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதி்க்​கப்​பட்​டது.

வெள்ளாற்றில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தீயணைப்பு வீரர்கள்.

வெள்ளாற்றில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் தீயணைப்பு வீரர்கள்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அடுக்கம் கிராமமே தனித்தீவாக மாறியது. கனமழை எச்சரிக்கை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் இன்றும் மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை: கன மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (அக்.26) விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

கோவை, திண்டுக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (அக்.26) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: புயல் சின்னம் காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டுள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தைச் சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது.

பெற்றோருக்கு ‘குறி’... வன்முறையைத் தடுக்க பிரான்ஸ், இத்தாலியின் புதிய உத்தி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in